பயங்கரவாத எதிர்ப்பில் இலங்கைக்கு உதவுவதில் ஆர்வம் கொண்டுள்ள இஸ்ரேல்!
இந்தியாவின் இஸ்ரேல் துாதுவர் நயோர் கிலான் (Naor-Gilon) இலங்கைக்கும் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்தியா மற்றும் பூட்டான் நாடுகளுக்கு இஸ்ரேல் நாட்டின் சார்பில் தூதராக செயல்பட்டு வரும் நயோர் கிலான் தற்போது இலங்கைக்கும் இஸ்ரேல் நாட்டின் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் இலங்கை ஜனாதிபதி கோட்டபய ராஜபக்சவை , சந்தித்து அவரிடம் பதவிச் சான்றுகளை அளித்து அதிகாரப்பூர்வ இலங்கை - இஸ்ரேல் துதராக பதவி ஏற்றுக்கொண்டார்.
அத்துடன் நயோர் கிலான், இலங்கையின் பிரதமர் மகிந்த ராஜபக்சவையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இதன்போது, விவசாயம், நீர், பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் இன்னும் பல துறைகளில் இஸ்ரேலுக்கும் இலங்கைக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேலும் தீவிரப்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டதாக நயோர் கிலான் தமது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்
Had a meeting with the PM of #SriLanka H.E Mahinda Rajapaksa. We discussed how we can further intensify cooperation between #Israel and Sri Lanka in different fields including agriculture, water, counter -terrorism and more. pic.twitter.com/KseTk8vApX
— Naor Gilon (@NaorGilon) February 2, 2022





குக் வித் கோமாளி டைட்டில் ஜெயித்தது இவர்தான்.. மொத்த ஷோவும் ஸ்கிரிப்ட் தானா? ராஜூ விளக்கம் Cineulagam

தப்பிக்கும் போது குணசேகரனிடம் வசமாக சிக்கிய சக்தி, தர்ஷன், பின் நடந்த பரபரப்பு சம்பவம்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
