பாலஸ்தீனியர்களை வெளியேற்றும் நடவடிக்கைகளில் இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள்
இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் பலஸ்தீனியர்களை அவர்களது பூர்வீக நிலங்களில் இருந்து வெளியேற்றும் நடவடிக்கைகளை இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் தீவிரப்படுத்தியுள்ளன.
நேற்றையதினம்(01), ராமல்லாவிற்கு கிழக்கே உள்ள அபு நஜீ அல்-காப்னே (Abu Najeh al-Kaabneh) பெடோயின் சமூகத்தின் குடியிருப்புப் பகுதிக்குள் புகுந்த இராணுவத்தினர், அங்குள்ள 40 குடியிருப்பாளர்களையும் 48 மணி நேரத்திற்குள் வெளியேறுமாறு உத்தரவிட்டனர்.
இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள்
அந்தப் பகுதியை 'மூடப்பட்ட இராணுவ மண்டலமாக' அறிவித்துள்ள இஸ்ரேல், அங்கிருந்த வீடுகளை அகற்றவும் ஆணையிட்டுள்ளது.
இதேபோல், ஜெரிக்கோவிற்கு வடக்கே இருந்த ஷல்லால் அல்-அவ்ஜா சமூகம் பல ஆண்டுகளாக இஸ்ரேலிய குடியேற்றவாசிகளின் துன்புறுத்தலுக்கு உள்ளாகி, தற்போது அங்கிருந்து முழுமையாக வெளியேற்றப்பட்டுள்ளது.

இந்த வெBAZ65ளியேற்ற நடவடிக்கைகளை ஆவணப்படுத்த முயன்ற மூன்று வெளிநாட்டு ஆர்வலர்களையும் இஸ்ரேலியப் படைகள் கைதுசெய்துள்ளன.
மறுபுறம், ஆக்கிரமிக்கப்பட்ட கிழக்கு ஜெருசலேமில் உள்ள ஜபல் முகாபர் (Jabal Mukaber) பகுதியில், யாசர் மகேர் தானா எனும் பலஸ்தீனியர் தனது 100 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட வீட்டை இஸ்ரேலிய அதிகாரிகளின் வற்புறுத்தலால் அவரே இடிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார்.
இஸ்ரேல் அரசு விதிக்கும் அபாரமான கட்டணத்தைத் தவிர்க்கவே பலஸ்தீனியர்கள் தங்கள் வீடுகளைத் தாங்களே இடிக்கின்றனர்.
பலஸ்தீனியர்களின் நடமாட்டம்
இதேபோல் சில்வான் மற்றும் வாடி கடம் பகுதிகளிலும் பல வீடுகளுக்கு இடிப்பு நோட்டீஸ்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், அல்-அக்ஸா மசூதி வளாகத்திற்குள் இஸ்ரேலிய குடியேற்றவாசிகள் சட்டவிரோதமாகப் புகுந்து வழிபாடுகளில் ஈடுபட்டது பதற்றத்தை அதிகரித்துள்ளது.

ஜோர்டான் பள்ளத்தாக்கு மற்றும் கல்ய்கியா பகுதிகளில் இஸ்ரேலிய குடியேற்றவாசிகளின் வன்முறை அதிகரித்துள்ளது. அல்-மலே பள்ளிக்குச் சென்ற ஆசிரியர்களைக் குடியேற்றவாசிகள் தடுத்து நிறுத்தியதால் குழந்தைகளின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும், குடியேற்றவாசிகள் பலஸ்தீனிய வீடுகள் மீது தாக்குதல் நடத்தியதுடன், பாதுகாப்பற்ற நிலையில் உள்ள குடும்பங்களை அச்சுறுத்தி வருகின்றனர்.
தற்போது மேற்குக் கரை முழுவதும் இஸ்ரேல் அமைத்துள்ள 916 இராணுவச் சோதனைச் சாவடிகளால் பலஸ்தீனியர்களின் நடமாட்டம் முடக்கப்பட்டுள்ளதோடு, உள்ளூர் பொருளாதாரமும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் நியூ என்ட்ரியால் ஜனனிக்கு ஏற்படப்போவது?... வெளிவந்த புரொமோ Cineulagam