சர்வதேச இராஜதந்திரிகளை இலக்கு வைத்த இஸ்ரேலிய இராணுவம்
காஸாவில் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் உள்ள ஜெனின் அகதிகள் முகாமுக்கு ஐரோப்பிய மற்றும் அரபு இராஜதந்திரிகள் உத்தியோகபூர்வ விஜயம் செய்தபோது இஸ்ரேலிய இராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தியமையானது பெரும் கண்டனத்தை பெற்றுள்ளது.
முற்றுகையிடப்பட்ட முகாமில் மனிதாபிமான நிலைமையைக் காண இங்கிலாந்து, பிரான்ஸ், கனடா மற்றும் பிற நாடுகள் உட்பட 20க்கும் மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகள் அதிகாரப்பூர்வ பயணத்தில் ஈடுபட்டதாக பாலஸ்தீன ஆணையத்தின் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதன்போதே குறித்த துப்பாக்கிச்சூடு இடம்பெற்றுள்ளது.
Israeli 🇮🇱 soldiers open fire at a delegation of foreign diplomats, around 30 ambassadors and consuls, visiting Jenin in the West Bank 🇵🇸
— Howard Beckett (@BeckettUnite) May 21, 2025
Israel 🇮🇱 is a pariah nation
They want isolation, give them isolation
Sanctions now
Expel 🇮🇱 from the UN today.pic.twitter.com/wtoeI4r6VT
சட்டவிரோத செயல்
இந்த சம்பவம் வேண்டுமென்றே செய்யப்பட்ட மற்றும் சட்டவிரோதமான செயல் என்று பாலஸ்தீன தரப்புக்கள் தெரிவித்துள்ளன.
இந்த சம்பவத்தில் இஸ்ரேலிய வீரர்கள் இராஜதந்திரிகள் வருகைத்தந்த பாதையை தடுத்த ஒரு வாயிலிலிருந்து பின்வாங்கும்போது தூதுக்குழுவை நோக்கிச் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.
இந்த குற்றவியல் தாக்குதலுக்கு இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு அரசாங்கத்தை முழுமையாகவும் நேரடியாகவும் பொறுப்பேற்க அமைச்சகம் கோரிவருகிறது.
மேலும் இதுபோன்ற செயல்கள் பொறுப்புக்கூறலை புறக்கணிப்பதை பாலஸ்தீனம் கடந்து செல்லாது என்பதை உறுதிப்படுத்துகிறது என அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

கொழும்பில் இளம் யுவதிக்கு உதவிய குடும்பம் ஒன்றுக்கு அதிர்ச்சி : கொலை மிரட்டல் விடுக்கும் மர்ம கும்பல்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



பதினாறாவது மே பதினெட்டு 3 நாட்கள் முன்

முழுசா 10 ஆண்டுகளுக்கு பின் வரும் சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அதிஷ்டம் எந்த ராசிகளுக்கு? Manithan

அடுத்த 12 மணி நேரத்தில் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி.., எந்தெந்த பகுதிகளில் மழை? News Lankasri
