ஹமாஸ் போராளிக்கு முத்தம் கொடுத்த இஸ்ரேல் பணய கைதி!
நேற்றையதினம் 6 இஸ்ரேலிய கைதிகள் விடுவிக்கப்படும்போது அதில் ஒருவர் ஹமாஸ் அமைப்பினர் ஒருவருக்கு நெற்றியில் முத்தமிட்ட காட்சி அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
அதனை தொடர்ந்து, இதுதொடர்பாக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு(Benjamin Netanyahu) இன்று காலை வெளியிட்ட அறிக்கை பெரும் அதிர்வலைகளை தோற்றுவித்தள்ளது.
ஹமாஸ் அமைப்பினர் ஒருவருக்கு நெற்றியில் முத்தமிட்டமைக்கு தமது அதிருப்தியையும், இஸ்ரேல் வசமுள்ள பாலஸ்தீனிய கைதிகளை விடுவிக்கபோவதில்லை என்றும் நெதன்யாகு கூறியுள்ளார்.
பாலஸ்தீன கைதிகளை விடுவிக்க இஸ்ரேல் திடீர் மறுப்பு தெரிவித்துள்ள நிலையில் அமைதிப் பேச்சுவார்த்தை கேள்விக்குறியாகியுள்ளது.
காசாவில் கடந்த 15 மாதமாக நடந்து வந்த போர் தற்காலிக அமைதி உடன்படிக்கை மூலம் ஜனவரி 19 ஆம் திகதி நிறுத்தபட்டது.
இந்த உடன்படிக்கையில் பாலஸ்தீன கைதிகளுக்கு ஈடாக இஸ்ரேலிய கைதிகளை விடுவித்தல், காசாவிலிருந்து இஸ்ரேலிய படைகளை திரும்பப் பெறுதல், 15 மாதங்களாக இடைவிடாத இஸ்ரேலிய குண்டுவீச்சினால் அழிக்கப்பட்ட பகுதிக்கு உதவி வழங்குதல் ஆகியவை இதில் அடங்கும். ஒப்பந்தத்தின்படி பல்வேறு கட்டங்களாக ஹமாஸ் - இஸ்ரேல் இடையே கைதிகள் பரிமாற்றம் நடந்து வருகிறது.
நேற்று 6 இஸ்ரேல் பணய கைதிகளை ஹமாஸ் விடுதலை செய்தது. இந்நிலையில் திட்டமிட்டபடி அவர்களுக்கு ஈடாக இஸ்ரேல் பிடித்துவைத்துள்ள பாலஸ்தீனிய கைதிகளில் 650 பேரை விடுதலை செய்ய மறுத்துள்ளது.
பணய கைதிகள் பரிமாற்றம்
எதிர்வரும் மார்ச் 1ஆம் திகதியுடன் போர் நிறுத்தம் முடிவடைய உள்ள நிலையில் அடுத்தகட்ட அமைதிப் பேச்சுவார்த்தை கேள்விக்குறியாகி உள்ளது.
இந்நிலையில் இஸ்ரேல் தொடர்ந்து ஒப்பந்தத்தை மீறி வருவதாக ஹமாஸ் மூத்த அதிகாரி பாஸ்ஸெம் நயீம் தெரிவித்துள்ளார்.
சர்வதேச ஊடகமொன்றிற்கு செவ்வியளித்த பாஸ்ஸெம் நயீம், "போர் நிறுத்தத்தின் முதல் கட்டத்தின் போது, இஸ்ரேலிய இராணுவம் 100 பலஸ்தீனியர்களைக் கொன்றது.
இதுபோன்று தொடர்ந்து வரும் செயல்கள் ஒப்பந்தத்தை முறிக்கவும், மீண்டும் போருக்குத் திரும்புவதற்கான அதன் விருப்பத்தை வெளிப்படுத்தும் வலதுசாரி இஸ்ரேல் அரசாங்கத்தின் ஒரு மோசமான தந்திரம் என்று நாங்கள் கருதுகிறோம்" என்றும் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதி: அநுர அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன...! 19 மணி நேரம் முன்

எந்த விடயத்திலும் perfection பார்க்கும் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan

முகேஷ் அம்பானியை விட ஒரு காலத்தில் பெரும் கோடீஸ்வரராக இருந்தவர்... இன்று வாடகை குடியிருப்பில் News Lankasri
