அம்பாறையில் இடம்பெற்ற வாகன விபத்தில் வெளிநாட்டு பிரஜை உயிரிழப்பு
அம்பாறை(Ampara0 பொத்துவில் - அக்கரைப்பற்று வீதியில் இடம்பெற்ற விபத்தில் இஸ்ரேலிய நாட்டு பிரஜை ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்தானது நேற்று முன்தினம் (01) இடம்பெற்றுள்ளதாக பொத்துவில் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்போது 23 வயதுடைய இஸ்ரேலிய பிரஜையொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலதிக விசாரணைகள்
மோட்டார் சைக்கிள் ஒன்று உழவு இயந்திரம் ஒன்றின் பின்புறத்தில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தின் போது மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்ற இஸ்ரேலிய பிரஜை படுகாயமடைந்துள்ள நிலையில் பொத்துவில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
உயிரிழந்தவரது சடலம் பொத்துவில் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதோடு, சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொத்துவில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

சீனாவைப் புறக்கணிக்கும் இந்திய மின்னணு உற்பத்தியாளர்கள் - தாய்வான், தென்கொரிய நிறுவனங்களுடன் ஒப்பந்தம் News Lankasri

திருமணமாகாமல் இரட்டை குழந்தைக்கு தாயான நடிகை பாவனா.. 40 வயதில் வந்த ஆசையாம்.. வைரலாகும் பதிவு! Manithan
