ரஃபா மீதான தாக்குதலை ஆதரித்துள்ள இஸ்ரேலிய அமைச்சரவை: பதற்றத்தின் உச்சத்தில் மத்தியகிழக்கு
காசா(Gaza) பிராந்தியத்தில் திட்டமிட்ட ரஃபா போர் நடவடிக்கையை தொடர இஸ்ரேலிய அமைச்சரவை ஒப்புக்கொண்டதாக அந்நாட்டு பிரதமர் அலுவலகம் செய்தி வெளியிட்டுள்ளது.
''எங்கள் நாட்டில் இருந்து கடத்தப்பட்ட வீரர்களை விடுவிப்பதற்கும் பிற போர் நோக்கங்களை முன்னெடுப்பதற்கும் இஸ்ரேல் இராணுவ அழுத்தத்தை ஹமாஸ் மீது பிரயோகிக்க ரஃபாவில் தனது நடவடிக்கையைத் தொடரும் என்று போர் அமைச்சரவை ஒருமனதாக முடிவு செய்துள்ளது" என இஸ்ரேலின்(Israel) அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கிழக்கு ரஃபாவில் ஹமாஸ் அமைப்பின் இலக்குகளுக்கு எதிராக இராணுவம் துல்லியமான, தாக்குதல்களை நடத்தியுள்ளதாக இஸ்ரேல் பாதுகாப்பு படைகளின் (IDF) செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
BREAKING - RAFAH CONTINUES
— Open Source Intel (@Osint613) May 6, 2024
Israel Prime Minister's Office:
The War Cabinet has unanimously decided that Israel will continue its operation in Rafah to exert military pressure on Hxmas in order to advance the release of our abducted soldiers and other war objectives.… pic.twitter.com/A0AWm1GOwH
திட்டமிட்ட ரஃபா நடவடிக்கை
இந்நிலையில் இஸ்ரேலின் திட்டமிட்ட ரஃபா நடவடிக்கையை தொடர இஸ்ரேலின் அமைச்சரவையும் இணக்கம் தெரிவித்துள்ளது.
கட்டார் மற்றும் எகிப்திய போர்நிறுத்த முன்மொழிவுகளுக்கு மத்தியில் குறித்த அறிவிப்பு வெளியானமை மத்தியகிழக்கில் பெரும் அச்சநிலையை தோற்றுவித்துள்ளது.
The IDF is currently conducting targeted strikes against Hamas terror targets in eastern Rafah in southern Gaza. pic.twitter.com/bmZgoNKXMB
— Israel Defense Forces (@IDF) May 6, 2024
you may like this
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |