பாலஸ்தீனத்தின் சுஜாயா பகுதியில் இஸ்ரேல் திடீர் தாக்குதல்
பாலஸ்தீன காசா நகர் சுஜாயா பகுதியின் குடியிருப்புகளின் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் குறைந்தது 35 பேர் கொல்லப்பட்டதாகவும், பலர் காயமடைந்ததாகவும் மருத்துவத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
வடக்கு காசாவில் நேற்று நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று காசா சுகாதார அமைச்சகம் அச்சம் வெளியிட்டுள்ளது.
இந்தநிலையில், இடிபாடுகளுக்குள் சிக்கியிருப்பதாக நம்பப்படும் காணாமல் போன பல குடியிருப்பாளர்களைக் கண்டுபிடிக்க சிவில் பாதுகாப்பு குழுவினரும், பொதுமக்களும் தேடுதல்களில் ஈடுபட்டுள்ளனர்.
மூத்த ஹமாஸ் போராளி
இஸ்ரேலிய இராணுவம் இந்த தாக்குதல் ஒரு மூத்த ஹமாஸ் போராளியை குறிவைத்ததாகக் கூறியுள்ளது.
எனினும், அவரது பெயரை வெளியிடவில்லை, சம்பவத்தின்போது பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்பைக் குறைக்க பல நடவடிக்கைகளை எடுத்ததாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.
ஹமாஸுடனான கிட்டத்தட்ட இரண்டு மாத போர் நிறுத்தத்திற்குப் பின்னர், 2025 மார்ச் 18 அன்று இஸ்ரேல் காசா மீது வான்வழித் தாக்குதலை மீண்டும் தொடங்கியது.
பின்னர் அதன் தரைவழித் தாக்குதலை பிரதேசம் முழுவதும் விரிவுபடுத்தியது. இதன்படி, இஸ்ரேல் தனது தாக்குதலை மீண்டும் தொடங்கியதிலிருந்து.
1,400 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக பாலஸ்தீன சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர். இந்தநிலையில், எகிப்து, கத்தார் மற்றும் அமெரிக்கா ஆகிய மத்தியஸ்தர்கள் போர் நிறுத்த நீடிப்பு தொடர்பான பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்க முயன்றனர்.
ஆனால் வெற்றி பெறவில்லை. கடந்த வருடம் ஆரம்பிக்கப்பட்ட காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 50,800 க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் இதுவரை கொல்லப்பட்டதாக பாலஸ்தீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |