இஸ்ரேல் அதிரடித் தாக்குதல்: லெபனான் பாதுகாப்புப் படை வீரர்கள் 13 பேர் பலி - லெபனான் ஜனாதிபதி கடும் கண்டனம்
தெற்கு லெபனானில் உள்ள நபதியே (Nabatieh) நகரின் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 13 அரசு பாதுகாப்புப் படை வீரர்கள் கொல்லப்பட்டதாக லெபனான் ஜனாதிபதி மாளிகை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
அந்த நகரில் உள்ள அரசு அலுவலகங்கள் மற்றும் பாதுகாப்புத்துறை கட்டடங்களை இலக்கு வைத்து இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.
ஈரானிய தூதுக்குழு பாகிஸ்தான் சென்றடைந்த விமானத்தின் பெயர்! தரையிறங்கியவுடன் வெளியிட்ட நெகிழ்ச்சி பதிவு
லெபனான் ஜனாதிபதி ஜோசப் அவ்ன் (Joseph Aoun), இஸ்ரேலின் இந்த நடவடிக்கையை வன்மையாக கண்டித்துள்ளார்.
தாக்குதல்
அரசு நிறுவனங்களை குறிவைத்துத் தாக்குவது நாட்டின் இறையாண்மையைப் பாதுகாப்பதில் இருந்து லெபனானைத் தடுத்துவிடாது என்றும் அவர் தனது எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ளார்.

ஈரானுடன் போர் நிறுத்தப் பேச்சுவார்த்தைகள் தொடங்கும் சூழலில், லெபனான் எல்லைப் பகுதிகளில் இஸ்ரேல் தனது தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ளது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இருப்பினும், இந்தத் தாக்குதல் குறித்து இஸ்ரேலிய இராணுவம் இதுவரை அதிகாரபூர்வமாக எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை.
அமைதிப் பேச்சுவார்த்தைக்காக புறப்பட்ட ஈரானிய தூதுக்குழுவினர்! போர் விமானங்களின் இரைச்சலால் அதிர்ந்த பாகிஸ்தான்