காசா மருத்துவர்கள் மீதான தாக்குதல்.. காணொளியில் அம்பலமான இஸ்ரேலின் தந்திரம்
மார்ச் 23ஆம் திகதி அன்று நோயாளர் காவு வண்டி மற்றும் தீயணைப்பு வண்டியின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி 15 மீட்புப் பணியாளர்களைக் கொன்றதற்கான காரணத்தை இஸ்ரேல் கூறியதற்கு முரணாக ஒரு காணொளி வெளியாகியுள்ளது.
பாலஸ்தீன ரெட் கிரசண்ட் சொசைட்டி (PRCS) வெளியிட்ட அந்த காணொளியில், வாகனங்கள் இருளில் நகரும் போது, ஹெட்லைட்கள் மற்றும் அவசரகால ஒளிரும் விளக்குகளை எரியவிட்டு, துப்பாக்கிச் சூட்டில் சிக்குவதை பதிவாகியுள்ளது.
வெளியான காணொளி
கொல்லப்பட்ட ஒரு துணை மருத்துவர் ஒருவரின் தொலைபேசியில் இருந்து இந்த காணொளி பெறப்பட்டதாக PRCS தெரிவித்துள்ளது.
🚨 NEW EVIDENCE: Medics Massacre @nytimes obtained footage of Israel attacking the 15 massacred medics in Gaza.
— Bashar Zapen (@BasharZapen) April 5, 2025
A paramedic says his last prayer as the IDF immediately starts shooting & killing them.
The ambulances had lights on & were clearly marked, refuting Israel's lies. pic.twitter.com/7DqVZVUkGT
இருப்பினும் முன்னதாக, இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் (IDF) ஆரம்பத்தில் வாகனங்களின் ஹெட்லைட்கள் அல்லது அவசரகால சமிக்ஞைகள் எரிந்திருப்பதை மறுத்தன.
இந்நிலையில் இந்த காணொளிக்கு பதிலளிக்கும் முகமாக இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள், சம்பவம் குறித்து பரவும் ஆவணங்கள் உட்பட அனைத்து கூற்றுக்களும், நிகழ்வுகளின் வரிசை மற்றும் சூழ்நிலையை எவ்வாறு கையாள்வது என்பதைப் புரிந்துகொள்ள முழுமையாகவும் ஆழமாகவும் ஆராயப்படும் என குறிப்பிட்டுள்ளன.
அத்துடன், உயிர் பிழைத்த ஒரு துணை மருத்துவர் முன்பு நோயாளர் காவு வண்டிகளின் உள் மற்றும் வெளிப்புற விளக்குகள் எரிந்திருந்ததாகவும் கூறினார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

அப்பாவி இளைஞன் மீது விளையாடும் பயங்கரவாத தடை சட்டம் ஒழியுமா..! 44 நிமிடங்கள் முன்

உலகின் எதிர்காலமே இதுதானாம்! தங்கத்தை விட முக்கியம்..நாடொன்றில் கொட்டிக்கிடக்கும் புதையல் News Lankasri
