காசாவில் கொடூர தாக்குதல்: போரின் கோர முகத்தை வெளிப்படுத்திய சிறுமி
காசாவின் (Gaza) ரஃபா (Rafah) நகரின் மீது இஸ்ரேல் (Israel) தாக்குதல் நடத்தியதையடுத்து, இடிபாடுகளுக்குள் சிக்கிய லானா ஷாகவுட் (Lana Zakout) என்ற 12 வயது சிறுமி தனது உயிர் தப்பிய நொடிகளை பகிர்ந்துள்ளார்.
காசாவின் ரஃபா நகரின் மீது தரைவழி ஆக்கிரமிப்பை நடத்துவதற்கான தாக்குதலை இஸ்ரேல் முன்னெடுத்து வருவதாக சர்வதேச ஊடகங்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலை கைவிடும்படி சர்வதேச ரீதியாக கோரிக்கைகள் விடுக்கப்பட்டிருந்த போதும் இஸ்ரேல் தனது முடிவில் உறுதியாக உள்ளது.
மீட்கப்பட்ட சிறுமி
இந்நிலையில், தாக்குதலில் இருந்து உயிர்தப்பிய குறித்த 12 வயது சிறுமி தனது மோசமான அனுபவத்தை தெரிவிக்கையில்,
நாங்கள் அனைவரும் தூங்கி கொண்டிருந்த போது, நான் எனது சகோதரியின் அழுகுரலை கேட்டேன்.

நாங்கள் தங்கியிருந்த கட்டடத்தின் கூரை இடிந்து விழுந்ததையடுத்து நாங்கள் இடிபாடுகளுக்குள் சிக்கினோம். நான் கனவில் இருப்பதாக எண்ணினேன்.

ஆனால் கண்விழித்து பார்த்த போது கருப்பு புகை அந்த இடத்தில் சூழ்ந்திருந்தது.
அரை மணி நேரம் கழித்து நான் இடிபாடுகளிலிருந்து மீட்கப்பட்டேன் என தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
2007ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளிவந்த அழகிய தமிழ் மகன், வேல், பொல்லாதவன் படங்கள்.. பாக்ஸ் ஆபிஸ் வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam
பழனிவேலா இது, இப்படியொரு காரியத்தை செய்துவிட்டார், பாண்டியன் என்ன செய்வார்... பாண்டியன் ஸ்டோர்ஸ் அடுத்த கதைக்களம் Cineulagam
சக்தியை முடித்த சந்தோஷத்தில் குணசேகரன், என்ன செய்வது என்ற பதற்றத்தில் ஜனனி...எதிர்நீச்சல் தொடர்கிறது ஸ்பெஷல் புரொமோ Cineulagam