ஹிஸ்புல்லாவுக்கு எதிரான தாக்குதலில் இஸ்ரேல் வகுத்துள்ள புதிய திட்டம்
லெபனானில் ஒரு வரையறுக்கப்பட்ட தரைவழி தாக்குதல் நடவடிக்கையை இஸ்ரேல் திட்டமிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இது தொடர்பிலான தாக்குதல்கள் விரைவில் தொடங்கும் என இஸ்ரேல் அமெரிக்காவிடம் கூறியதை மேற்கோள் காட்டியே இந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளன.
2006 ஆம் ஆண்டு ஹிஸ்புல்லாவுக்கு எதிரான இஸ்ரேலின் போரை விட இந்த நடவடிக்கை சிறியதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எல்லை பாதுகாப்பு
மேலும் எல்லை சமூகங்களுக்கான பாதுகாப்பில் கவனம் செலுத்தும் இஸ்ரேலின் ஒரு நகர்வாகவும் இது கருதப்படுகிறது.

லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா போராளிகளுக்கு எதிராக தரைப்படைகள் பயன்படுத்தப்படலாம் என்று இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் Yoav Gallant கூறியுள்ளார்.
ஹிஸ்புல்லாவின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்ட போதிலும் எமது இராணுவ நடவடிக்கைகள் தொடரும் என்று Yoav Gallant தெரிவித்துள்ளார்.
மேலும், நஸ்ரல்லாவை இல்லாதொழித்தது ஒரு முக்கியமான படியாகும், ஆனால் அது இறுதியானது அல்ல என அவர் விளக்கமளித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
கறுப்பு ஜூலை 1983ஆம் ஆண்டின் ஆறாவடுவும் தீராத தமிழர் பிரச்சினையும் 10 மணி நேரம் முன்
இரட்டை குழந்தைகளுக்கு தந்தையானார் நடிகர் கவின்.. மகிழ்ச்சியில் வெளியிட்ட பதிவு! குவியும் வாழ்த்துகள் Cineulagam