ஹமாஸின் இலக்குகளை சில நொடிகளில் அழித்துவிடக்கூடிய இஸ்ரேலின் புதிய கண்டுபிடிப்பு (Video)
காசா நகரைச் சுற்றிவளைத்துள்ள இஸ்ரேலியப் படைகள் காசா நகருக்குள் நுழையும்போது ஹமாஸின் கடுமையான தாக்குதல்களை எதிர்கொள்ள நேரிடும் என்றே கூறுகின்றார்கள் பல போரியல் நோக்கர்கள்.
அதேவேளை, காசா நகருக்குள் நுழைவதற்கு முன்னதாக, அங்கு தயாராக இருக்கும் ஹமாஸ் உறுப்பினர்களைச் செயலிழக்கச் செய்யக்கூடிய பல நவீன ஆயுதங்களை இஸ்ரேலியப் படைகள் பயன்படுத்தலாம் என்றும் கூறுகின்றார்கள் சில மேற்குலக ஆய்வாளர்கள்.
தடைசெய்யப்பட்ட ஆயுதங்களைக் கூட காசா நகருக்குள் இஸ்ரேலியப் படையினர் பாவிப்பதற்குச் சந்தர்ப்பம் இருப்பதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றார்கள்.
அதேவேளை, காசா நகரில் இடம்பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்ற கடுமையான சண்டைகளில், இஸ்ரேலியப் படைகள் பலவிதமான தமது புதிய கண்டுபிடிப்புக்களையும் முதன் முதலில் பரீட்சித்துப்பார்க்க இருப்பதாகக் கூறப்படுகின்றது.
இந்நிலையில், காசா நகருக்குள் இஸ்ரேலியப் படைகள் பரிட்சித்துப் பாரக்கலாம் என்று கூறப்படுகின்ற சில ஆயுதங்கள் பற்றிப் பார்க்கின்றது இந்த ‘உண்மையின் தரிசனம்’ நிகழ்ச்சி...

புலம்பெயர் நாடுகளில் இருந்து வருபவர்கள் கொழும்பில் நாட்களை செலவிட வேண்டாம்! பகிரங்க கோரிக்கை (Video)

தமிழ்நாடு தனது பண்பாட்டை இழக்கிறதா! 19 மணி நேரம் முன்

இந்திய போர் விமானங்களை வீழ்த்த பாகிஸ்தான் பயன்படுத்திய J-10C., சீனா வெளியிட்ட ஆவணப்படம் News Lankasri

புதிய சீரியல் நடிக்கும் மகாநதி சீரியல் நடிகர் சுவாமிநாதன், அட நாயகி இவர் தானா... புதிய ஜோடி, புரொமோ இதோ Cineulagam
