அமெரிக்காவை போருக்குள் தள்ள இஸ்ரேல் சதி - ஈரான் விடுத்துள்ள எச்சரிக்கை
அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கை மற்றும் உள்நாட்டு அரசியலில் இஸ்ரேல் தீவிரமாக தலையிட்டு வருவதாக ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி குற்றம் சாட்டியுள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் முன்னாள் தேர்தல் பிரச்சார மேலாளர் பிராட் பார்ஸ்கேல், “MAGA”ஆதரவாளர்களை இலக்காகக் கொண்டு இஸ்ரேலிய செல்வாக்கு செலுத்தும் பிரச்சாரம் முன்னெடுக்கப்படுவதாக வெளியான கட்டுரையை மேற்கோள் காட்டி தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
வரி பணத்தை செலவு செய்யும் அமெரிக்கா
அந்த பதிவை மேற்கோள் காட்டியுள்ள அப்பாஸ் அரக்சி,
அமெரிக்க நிர்வாகத்தை ஒருபோதும் வெல்ல முடியாத ஒரு போருக்குள் தள்ளுவதற்காக இஸ்ரேல் சதி செய்து வருவதாகக் குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும், அமெரிக்காவை விமர்சிக்கும் குரல்களை ஒடுக்க இஸ்ரேல், அமெரிக்க வரி செலுத்துவோரின் பணத்தைப் பயன்படுத்துவதாகவும், இது தொடர்பான உண்மைகள் விரைவில் வெளிச்சத்திற்கு வரும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

நீர்கொழும்பு சிறைக் கலவரத்தில் கொல்லப்பட்டவர்கள் கைதிகள் அல்ல! வெளிவந்திருக்கும் திடுக்கிடும் தகவல்கள்....