காசா வடக்கு எல்லையில் வசிப்பவர்களுக்கு இஸ்ரேல் விடுத்துள்ள உத்தரவு
கடந்த ஏழு மாதங்களாக காசா (Gaza) மீது தொடர் தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேல்(Israel) காசா எல்லையின் வடக்கில் உள்ள பெய்ட் லஹியா நகரத்தில் வசிக்கும் பொது மக்களை விரைந்து அந்த பகுதியில் இருந்து வெளியறுமாறு உத்தரவிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
புதிய திட்டமிடலின் கீழ் பெய்ட் லஹியாவில் உள்ள ஹமாஸ் உள்கட்டமைப்பு பகுதிகள் மீது கடுமையான தாக்குதல் நடத்தப்பட இருப்பதால் இந்த அறிவிப்பை இஸ்ரேல் பாதுகாப்பு படைகளின் செய்தி தொடர்பாளர் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்துமீறி நுழைந்த ஹமாஸ் அமைப்பினர்
மேலும், "நீங்கள் மிகவும் அபாயகரமான போர் மண்டலத்தில் இருக்கின்றீர்கள். உங்களை காப்பாற்றிக் கொள்ள உடனடியாக இந்த பகுதியில் இருந்து வெளியேறிவிடுங்கள்," என்று இஸ்ரேல் பாதுகாப்பு படைகளின் செய்தி தொடர்பாளர் அவிச்சே அட்ரே குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஆண்டு ஒக்போடர் மாத தொடக்கத்தில் இஸ்ரேல் நாட்டிற்குள் அத்துமீறி நுழைந்த ஹமாஸ் அமைப்பினர், கண்ணில் தென்பட்டவர்களை கண்மூடித்தனமாக சுட்டுக் கொன்றதோடு, 200 க்கும் மேற்பட்டோரை பிணைக்கைதிகளாக பிடித்து சென்றமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
சீனப் பெண் உளவாளியின் காதல் வலையில் சிக்கிய தொழில்நுட்ப கோடீஸ்வரர்: எச்சரிக்கும் அமெரிக்கா News Lankasri
Bigg Boss 10: முனியம்மாவின் 200 கிலோ சிக்கன் Luxury Purchases.... விஜய் சேதுபதி கேட்ட கேள்வி Manithan