தீவிரம் அடையும் ஈரான் - இஸ்ரேல் போர் - இலங்கையர்கள் தொடர்பில் வெளியான தகவல்
இஸ்ரேலின் தலைநகர் டெல் அவிவ் மற்றும் ஜெருசலேம் அருகே ஈரான் ஏவுகணை தாக்குதல்களை நடத்தி வருவதாக இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.
ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே அதிகரித்து வரும் போர் காரணமாக இஸ்ரேலின் சமீபத்திய நிலைமையை தெளிவுபடுத்தும் போது தூதுவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
வடக்கு டெல் அவிவ் பிராந்தியத்தில் உள்ள ஹெர்ஸ்லியா பகுதியில் ஏவப்பட்ட ஏவுகணைகள் இஸ்ரேலிய விமானப்படை மற்றும் இரும்பு டோம் வான் பாதுகாப்பு அமைப்பால் அழிக்கப்பட்டன.
அவசரகால நிலை
தாக்குதலின் போது சுவர்கள் குலுங்கின. வீடுகளின் ஜன்னல்கள் குலுங்கின. பல பகுதிகளில் கட்டிடங்கள் மற்றும் வாகனங்கள் தீப்பிடித்தன. 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளதாக தூதுவர் குறிப்பிட்டார்.

காயமடைந்தவர்களில் எந்த இலங்கையர்களும் இருப்பதாக இதுவரை உறுப்படுத்தவில்லை. இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகளால் அறிவிக்கப்பட்ட அவசரகால நிலை இன்னும் நடைமுறையில் உள்ளதாக அவர் தெரிவித்தார்.
டெல் அவிவ் சர்வதேச விமான நிலையம் மற்றும் இஸ்ரேலிய வான்வெளி மூடப்பட்டுள்ளன. இலங்கையிலிருந்து இஸ்ரேலுக்குத் திரும்பிய 5 இலங்கையர்கள் டுபாய் விமான நிலையத்தில் சிக்கித் தவிக்கின்றனர்.
இலங்கையர்களுக்கான ஏற்பாடு
டுபாயில் உள்ள துணைத் தூதரகம் மற்றும் அங்குள்ள இலங்கைத் தூதரகம் அபுதாபி விமான நிலையத்தில் சிக்கித் தவிக்கும் 5 இலங்கையர்களுக்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைத்து வருகின்றன.

அவர்களுக்கு தற்காலிக தங்குமிட விசாக்கள் மற்றும் தங்குமிடம் வழங்கப்பட்டுள்ளன. தற்போது இலங்கையில் விடுமுறையில் உள்ள அனைவரும் தங்கள் கடவுச்சீட்டின் நகலையும், இஸ்ரேலுக்குள் மீண்டும் நுழைவதற்காக வழங்கப்பட்ட விசாவின் நகலையும் தூதரகத்திற்கு அனுப்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இது அவர்களின் மறு நுழைவு விசாவை நீட்டிக்க உதவும். தூதரக அதிகாரிகள் நிலைமையைக் கண்காணித்து வருகின்றனர். மேலும் தற்போதைய சூழ்நிலையின் அடிப்படையில் உதவி தேவைப்படுபவர்கள் தூதரக அதிகாரிகளைத் தொடர்பு கொள்ளலாம்” என இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதர் நிமல் பண்டார மேலும் தெரிவித்துள்ளார்.
ஹீரோவாக என்ட்ரி கொடுக்கும் இயக்குனர் ஷங்கர் மகன் அர்ஜித்... நாயகி, பட பெயருடன் வெளியான போட்டோ Cineulagam
தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர் News Lankasri