ஹமாஸின் தாக்குதல் திட்டம் குறித்து அலட்சியம் செய்த இஸ்ரேல்
ஹமாஸ் தாக்குதலை மேற்கொள்ளவுள்ளமை குறித்து இஸ்ரேலிற்கு ஒருவருட காலத்திற்கு முன்னரே தெரிந்திருந்தது என சர்வதேச ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஹமாஸின் தாக்குதல்கள் குறித்த திட்டங்களை ஒரு வருடத்திற்கு முன்னரே இஸ்ரேல் பெற்றுக்கொண்டிருந்தது எனவும் அது தொடர்பான மின்னஞ்சல்களையும் விடயங்களையும் அறிந்தவர்களின் தகவல்களையும் அடிப்படையாக வைத்து குறித்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
இது தொடர்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
துல்லியமான தகவல்கள்
40 பக்கங்களை கொண்ட குறித்த ஆவணம் தாக்குதல் எப்போது இடம்பெறும் என தெரிவிக்கவில்லை. ஆனால் ஹமாஸ் மேற்கொள்ளவுள்ள தாக்குதல் குறித்து துல்லியமான தகவல்கள் அந்த ஆவணத்தில் காணப்பட்டன.
இந்நிலையில், அந்த விபரங்களை ஆராய்ந்த இஸ்ரேலின் பாதுகாப்பு மற்றும் புலனாய்வு பிரிவினர் ஹமாஸினால் அவ்வாறான தாக்குதலை மேற்கொள்ள முடியாது என நிராகரித்தனர்.
ஜெரிச்சோ வோல் என்ற அந்த ஆவணம் காசாபள்ளத்தாக்கினை சூழவுள்ள பகுதிகளில் உருவாக்கப்பட்டுள்ள நன்கு பாதுகாக்கப்பட்ட நிலைகளில் இருந்து தாக்குதல்கள் இடம்பெறலாம் என தெரிவித்திருந்தது.
ஜெரிச்சோ வோல் ஆவணம்
மேலும், ஹமாஸ் - இஸ்ரேலின் நிலைகளை கைப்பற்றலாம் தளங்களை கைப்பற்றலாம் எனவும் தெரிவித்திருந்தது.
எனினும் அதனை ஹமாஸ் துல்லியமாக செய்துள்ளது.
ஜெரிச்சோ வோல் ஆவணம் இஸ்ரேலிய பாதுகாப்பு மற்றும் புலனாய்வு தரப்பினர் மத்தியில் பரிமாறப்பட்டிருந்தது.
எனினும் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாகு அதனை பார்த்தாரா என்பது தெரியவில்லை.” என்றும் சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
இளைஞர்களை நினைவேந்தல் நிகழ்வுகளிலிருந்து விலக செய்யும் செயற்பாட்டையே அரசாங்கம் முன்னெடுக்கிறது: அருட்தந்தை மா.சத்திவேல்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |