இஸ்ரேல் - ஹமாஸ் போர் நிறுத்தம் குறித்து வெளியான தகவல்: செய்திகளின் தொகுப்பு
ஹமாஸ் அமைப்பினரை ஒழிக்கும் வரை போர் ஓயாது என காஸா மீது இஸ்ரேல் இராணுவம் தாக்குதல் நடத்தி வந்த நிலையில் கட்டார், எகிப்து, அமெரிக்கா ஆகிய நாடுகள் பிணைக்கைதிகளை விடுவிக்கும் வகையில் போர் நிறுத்த முயற்சியை மேற்கொண்டனர்.
இதன் பயனாக இந்திய நேரப்படி கடந்த வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு போர் நிறுத்தம் செய்யப்பட்டதாக இஸ்ரேல் அறிவித்தது. அதனைத் தொடர்ந்து பிணைக்கைதிகளை ஹமாஸ் அமைப்பினர் விடுவித்தனர்.
அதற்குப் பதிலாக சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த பலஸ்தீனர்களை இஸ்ரேல் விடுவித்தது. ஒரு பிணைக்கைதிக்கு மூன்று பலஸ்தீனர்கள் என்ற அடிப்படையில் பரிமாற்றம் நடைபெற்றது.
முதலில் நான்கு நாட்கள் போர் நிறுத்தம் ஏற்பட்டது. அதன்பின் இரண்டு நாட்கள் நீட்டிக்கப்பட்டது. நேற்று 6ஆவது நாளாக ஹமாஸ் அமைப்பினர் பிணைக்கைதிகளை விடுவித்தனர்.
அதற்குப் பதிலாக இஸ்ரேலும் பலஸ்தீனர்களை விடுவித்தது. இந்திய நேரப்படி இன்று காலை 10.30 மணியுடன் 6 நாள் போர் நிறுத்தம் முடிவுக்கு வந்தது.
இதனால் இஸ்ரேல் காஸா மீதான தாக்குதலை தொடருமா? போர் நிறுத்தம் மேலும் நீட்டிக்கப்படுமா? என்பது குறித்து தெளிவு இல்லாமல் இருந்தது.
இவை உள்ளிட்ட மேலும் பல செய்திகளை தொகுத்து வருகின்றது இன்றைய நாளுக்கான மாலை நேர செய்திகளின் தொகுப்பு,

துவாரகா விடயத்தில் புலம் பெயர் மூன்று அமைப்புகளும் மௌனம்! குழப்பத்தில் மக்கள்: பகிரங்க குற்றச்சாட்டு
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
