இஸ்ரேல் - காசா மோதல் விவகாரத்தில் இலங்கை நடுநிலை வகிக்க வேண்டும்: சஜித் அணி வலியுறுத்து
இஸ்ரேல் - காசா மோதலில் இலங்கை நடுநிலையான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தி வலியுறுத்தியுள்ளது.
இந்த நிலைப்பாடு எமது இலக்குகளை அடைய உதவும் என்றும் ஐக்கிய மக்கள் சக்தி சுட்டிக்காட்டியுள்ளது.
கொழும்பில் இன்று(16.10.2023) நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரத்ன இவ்வாறு கூறியுள்ளார்.
இலங்கையின் ஆதரவு
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
“காசா பகுதியில் மோதலில் ஈடுபட்டுவரும் எந்தவொரு தரப்பினரையும் இலங்கை ஆதரிக்கக் கூடாது.
பாதகமான விளைவுகள் எவையும் ஏற்படாதவாறு இலங்கை எடுக்கும் நிலைப்பாடுகள் அமைய வேண்டும்.
குறிப்பாக பொருளாதாரம் தொடர்பில் இலங்கை தனது சொந்த நிகழ்ச்சி நிரலில் கவனம் செலுத்த வேண்டும்" என்றார்.