ஹமாசின் உயிர்நாடி: மொத்த காசா நிலப்பரப்பும் இஸ்ரேலின் பிடியில்
காசாவின் மீது கடந்த ஆண்டு தீவிர தாக்குதலை ஆரம்பித்த இஸ்ரேல் இராணுவமானது தற்போது முழு நிலப்பரப்பையும் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
எகிப்தின் எல்லையில் ஒரு சிறிய பகுதியை இஸ்ரேல் கைப்பற்றியுள்ளதை தொடர்ந்து காசாவின் முழு நிலப்பரப்பும் இஸ்ரேலின் கட்டுப்பாட்டின் கீழ் வந்துள்ளது. இஸ்ரேலிய படையினர் குறிப்பிட்ட பகுதியை கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளனர்.
காசா பள்ளத்தாக்கிற்கும் எகிப்திற்கும் இடையில் உள்ள 14 கிலோமீற்றர் நீளமான பிலாடெல்பி கொறிடோரை கைப்பற்றியுள்ளதாக இஸ்ரேலின் தலைமை இராணுவ பேச்சாளர் டானியல் ஹகாரி தெரிவித்துள்ளார்.
ஹமாசிற்கான உயிர்நாடி
இதுவரை இந்த பகுதி மாத்திரமே இஸ்ரேலின் நேரடிகட்டுப்பாட்டின் கீழ் இல்லாமலிருந்த பகுதி ஆகும்.
இந்த பகுதியே ஹமாசிற்கான உயிர்நாடியாக விளங்கியது. காசாவிற்குள் ஆயுதங்களை கொண்டுவருவதற்கு ஹமாஸ் இந்த பகுதியை பயன்படுத்தியது என தெரிவித்துள்ள இஸ்ரேலின் தலைமை இராணுவ பேச்சாளர் டானியல் ஹகாரி 20 சுரங்கப்பாதைகளை அடையாளம் கண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் தனது ரபா தாக்குதலை நியாயப்படுத்துவதற்காக எகிப்திய எல்லையில் சுரங்கப்பாதைகளை கண்டுபிடித்துள்ளதாக தெரிவிக்கின்றது என எகிப்திய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |