ஒப்பந்தத்தை மீறிய இஸ்ரேல்! ஹமாஸின் அதிரடி நடவடிக்கையால் குழப்ப நிலை
போர்நிறுத்த ஒப்பந்தத்தை இஸ்ரேல் மீறியதாக குற்றம் சுமத்தியுள்ள ஹமாஸ், இஸ்ரேலிய பணயக்கைதிகளை விடுவிப்பதை தாமதப்படுத்தியுள்ளது.
வடக்கு காசாவில் இடம்பெயர்ந்தவர்களைத் திரும்பப் பெறுவதில் தாமதம், ஸ்டிரிப்பின் பல்வேறு பகுதிகளில் ஷெல் மற்றும் துப்பாக்கிச் சூடு மற்றும் மனிதாபிமான உதவிகளுக்கான அனுமதியை மறுப்பது போன்ற விதிமீறல்களில் இஸ்ரேல் ஈடுபடுவதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது.
இவ்வாறிருக்க, ஹமாஸின் இந்த முடிவு போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறியுள்ளதாக இஸ்ரேல் குற்றம் சுமத்தியுள்ளது.
பணயக்கைதிகள் பரிமாற்றம்
இந்நிலையில், காசாவில் உள்ள இஸ்ரேலியப் படையினரை எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளதாக இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் தெரிவித்துள்ளார்.

17 இஸ்ரேலிய பணயக்கைதிகள் போர் நிறுத்தத்தின் முதல் கட்டத்தில் இன்னும் விடுவிக்கப்பட உள்ளதாக இஸ்ரேல் தரப்பு கூறுவதுடன் அவர்களில் எட்டு பேர் ஏற்கனவே இறந்துவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை விடுவிக்கப்பட்ட பணயக்கைதிகளுக்கு பதிலாக நூற்றுக்கணக்கான பாலஸ்தீன கைதிகள் இஸ்ரேலால் விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஆனந்தியை கொலை செய்ய துளசி செய்த அதிர்ச்சி செயல், தப்பிப்பாரா?... சிங்கப்பெண்ணே சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam
ரயிலில் பிச்சை எடுத்த பெண்ணை திருமணம் செய்து கொண்ட இளைஞர்: பெற்றோர்களுக்கு குவியும் பாராட்டு News Lankasri