மத்திய காசாவில் அடுக்குமாடி குடியிருப்பு மீது குண்டு வீசிய இஸ்ரேல்
மத்திய காசாவின் டேர் அல்-பலாஹ் பகுதியில் இஸ்ரேல் படைகள் நடத்திய வான் தாக்குதலில் உள்ள ஒரு அடுக்குமாடி கட்டிடத்தில் வசித்த 12 பாலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஆனால் இந்த தாக்குதல் தொடர்பாக இஸ்ரேல் ராணுவம் தரப்பில் எந்த கருத்தும் தெரிவிக்கப்படவில்லை.

அதேசமயம், வடக்கு காசாவின் ஷெஜையா மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகள், தெற்கு காசாவின் ரபா, மத்திய காசா ஆகிய பகுதிகளில் ராணுவ நடவடிக்கை தொடர்வதாக இஸ்ரேல் ராணுவம் நேற்று செய்தி வெளியிட்டது.
ஹமாஸ் அமைப்பினரை முற்றிலும் ஒழிக்கும் நடவடிக்கை
காசாவை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினரை முற்றிலும் ஒழிக்கும் நடவடிக்கையாக இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதில், ஹமாஸ் அமைப்பினருடன் அப்பாவி பாலஸ்தீனர்களும் பலியாகின்றனர்.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஆரம்பமான இந்த யுத்தத்தில் இதுவரை காசாவில் 37,925 பேர் பலியாகியிருப்பதாக காசாவின் சுகாதார அதிகாரிகள் கூறியுள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
திரிஷா பற்றிய முக்கிய ரகசியத்தை போட்டுடைத்த விஷ்ணு விஷால்! கோபப்பட மாட்டார் என நம்புறேன்.. Cineulagam
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
சட்டவிரோதமாக வெளியான விஜய்யின் ஜனநாயகன் படத்தை இத்தனை கோடி பேர் பார்த்துள்ளார்களா?... ஷாக்கிங் தகவல் Cineulagam
அழும் குழந்தைகளை வாஷிங் மெஷினுக்குள் அடைக்கும் காப்பக ஊழியர்கள்: அதிரவைத்துள்ள ஒரு செய்தி News Lankasri