இஸ்ரேலின் பதிலடி: கடும் போர்பதற்றத்தில் லெபனான்..!
லெபனானிலிருந்து ஏவப்படும் ஏவுகணை தாக்குதல்களுக்கு உரிய பதிலடி கொடுப்பதாக இஸ்ரேல் அறிவித்துள்ள நிலையில் அந்நாட்டின் பிரதமர் நவாஃப் சலாம் லெபனான் ஒரு புதிய போரின் விளிம்பில் தத்தளித்து வருவதாக எச்சரித்துள்ளார்.
தெற்கு எல்லையில் திடீரென்று உருவான இராணுவ நடவடிக்கைகளுடன் தொடர்புடைய அபாயங்களை கருத்தில் கொண்டே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அந்தவகையில், தெற்கு எல்லையில் உருவாகியுள்ள இராணுவ நடவடிக்கைகள் லெபனான் மற்றும் அதன் மக்களை பழிவாங்கும் என்று அவர் அச்சம் வெளியிட்டுள்ளார்.
ஏவுகணை தாக்குதல்கள்
இஸ்ரேலிய இராணுவத் தலைவர் இயால் ஜமீரின் அறிக்கை ஒன்றில், இடைமறிக்கப்பட்ட ஏவுகணைகளுக்கு இராணுவம் கடுமையாக பதிலடி கொடுக்கும் என்று உறுதியளித்ததை அடுத்தே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், ஒப்பந்தத்தை நிலைநிறுத்தும் பொறுப்பு லெபனானுக்கு உண்டு என்று ஜமீர் வலியுறுத்தியுள்ளார். ஆனால் இன்னொரு போருக்கு லெபனான் தயாரல்ல என்றே பிரதமர் நவாஃப் சலாம் குறிப்பிட்டுள்ளார்.
போர் மற்றும் அமைதி விடயங்களில் லெபனான் முடிவெடுக்கிறது என்பதைக் காட்ட அனைத்து பாதுகாப்பு மற்றும் இராணுவ நடவடிக்கைகளும் எடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
தற்போதைய பதற்றங்கள் இஸ்ரேலுக்கும் ஹெஸ்பொல்லாவிற்கும் இடையிலான ஒரு வருட கால மோதலுக்கு முற்றுப்புள்ளி வைத்த போர்நிறுத்தத்தை முறியடிக்க வாய்ப்புள்ளதாகவே அச்சம் எழுந்துள்ளது.
இந்த வலுவற்ற போர் நிறுத்த ஒப்பந்தம் அண்மைய ஏவுகணை தாக்குதல்களின் அதிகரிப்பால் சிக்கலை எதிர்கொள்கிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பட்டலந்த இடிமுழக்கம் மழையைத் தராது 2 நாட்கள் முன்

மூளையில் பொருத்தப்பட்ட எலான் மஸ்க் நிறுவன சிப் - நினைப்பதன் மூலம் செயல்களை செய்யும் நபர் News Lankasri

விஜய்யுடன் சந்திப்பு.. கண்களில் கண்ணீர்! அஸ்வத் மாரிமுத்து டிராகன் பற்றி தளபதி என்ன சொன்னார் பாருங்க Cineulagam
