தேசபந்து தென்னகோனுக்கு வீட்டு சாப்பாடு..!
வீட்டிலிருந்து எடுத்து வரப்படும் உணவை உட்கொள்ள பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோனுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அவர் விடுத்த கோரிக்கையைத் தொடர்ந்து, சிறைச்சாலைகள் திணைக்களம், இதற்கான அனுமதியை வழங்கியுள்ளது.
விளக்கமறியல்
இதற்கிடையில், தேசபந்து தென்னகோனின் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை கருத்தில் கொண்டு, சிறைச்சாலைக்குள் பொருத்தமான இடத்தில் அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் பேச்சாளர் காமினி பி. திசாநாயக்க கூறியுள்ளார்.

மாத்தறை நீதவான் நீதிமன்றம் அண்மையில் அவரை ஏப்ரல் 3 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டது.
இதனையடுத்து அவர் தற்போது பல்லேகலையில் உள்ள தும்பர சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
இராணுவத்திற்கு என 1.5 டிரில்லியன் டொலர் ஒதுக்க திட்டமிடும் ட்ரம்ப்: கடும் அபாய நிலையிலா அமெரிக்கா? News Lankasri
உங்க படம் வந்தா தான் அது பொங்கல்... விஜய்யின் ஜனநாயகன் ரிலீஸ் தள்ளிப்போனது குறித்து பிரபலங்கள் வருத்தம் Cineulagam