இஸ்ரேலின் கோர முகம்! நீரின்றி தவிக்கும் பலஸ்தீனியர்கள்
காசாவின் நீர் அமைப்புக்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதையடுத்து, பாலஸ்தீனியர்களிடத்தில் பாரிய நீர் பற்றாக்குறை உருவாகியுள்ளது.
இஸ்ரேலிய இராணுவம் காசாவின் தென்கோடி நகரமான ரஃபாவை முற்றிலுமாக சுற்றி வளைத்துள்ளது.
பாதுகாப்பு மண்டலத்தை உருவாக்குவதற்காக இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் தெரிவித்துள்ளார்.

தொடரும் டொனால்ட் ட்ரம்பிற்கான அதிர்ச்சிகள்! அமெரிக்காவின் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள சடுதியான மாற்றம்
இராணுவ நடவடிக்கைகள்
அத்துடன், வடக்கு காசாவின் பல பகுதிகளையும் இஸ்ரேல் இராணுவம் கைப்பற்றி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கைகள் விரைவில் தீவிரமடைந்து காசாவின் பெரும்பாலான பகுதிகளுக்கு விரிவடையும் எனவும் அவர் கூறியுள்ளார்.
இந்நிலையில், தெற்கு காசாவில் உள்ள கான் யூனிஸ் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் பல்லாயிரக்கணக்கான மக்களை அங்கிருந்து உடனடியாக வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இஸ்ரேலிய இராணுவம் அந்த பகுதியில் பலமான நிலையில் இருப்பதாலும் எந்நேரத்திலும் தாக்குதல் நடத்தப்படலாம் என்ற காரணத்தினாலும் இந்த அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |