மத்திய காசாவில் பதற்றம்.. இஸ்ரேல் நடத்தி வரும் தீவிர தாக்குதல்கள்
மத்திய காசாவில் உள்ள டெய்ர் எல்-பலாவின் வடக்கே இஸ்ரேலிய போர் விமானங்கள் தீவிரமான தாக்குதல்களை நடத்தி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இஸ்ரேலிய இராணுவமும் ஹமாஸின் ஆயுதப் பிரிவும் காசாவில் இருந்து இஸ்ரேல் மீது ஏவுகணைகள் வீசப்பட்டதாகக் கூறியதைத் தொடர்ந்து இந்த தாக்குதல் செய்தி வெளியாகியுள்ளது.
இந்நிலையில், காசாவின் பல பகுதிகளில் நேற்ற காலை முதல் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் குறைந்தது 43 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.
குண்டுவீச்சு தாக்குதல்கள்
மேலும் கடந்த மார்ச் 18ஆம் திகதி அன்று இஸ்ரேல் போர் நிறுத்தத்தை முறித்ததிலிருந்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களில் இறந்தவர்களின் எண்ணிக்கை 1,335 என்று காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அத்துடன், கடந்த மாதம் ரஃபாவில் 15 அவசரகால ஊழியர்கள் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் கூறியதற்கு புதிய சான்றுகள் முரணாக இருப்பதால், தொடர்ச்சியான குண்டுவீச்சு தாக்குதல்கள் நடந்து வருகின்றன.
மருத்துவர்கள் மீதான தாக்குதல்
அது மாத்திரமன்றி, நேற்று முன்தினம் வெளியிடப்பட்ட காணொளி, தெளிவாகக் குறிக்கப்பட்ட மற்றும் அவசரகால வாகனங்களின் வரிசையின் மீது இஸ்ரேலிய வீரர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதைக் காட்டியது.
இருப்பினும், இது வண்டயில் "ஹெட்லைட்கள் இல்லாமல்" அல்லது "ஒளிரும் விளக்குகள்" இல்லாமல் வந்ததால், தங்கள் வீரர்கள் வாகனங்களை குறிவைத்ததாக இஸ்ரேல் தெரிவித்தது.
இந்நிலையில், இஸ்ரேலின் இந்த காசா மருத்துவர்கள் மீதான தாக்குதல் ஒரு போர்க்குற்றம் மற்றும் சர்வதேச சட்டத்தின் கடுமையான மீறல் என்று கண்டனம் எழுப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |