தனிமைப்படுத்தல் காலத்தில் மட்டும் வீதி விபத்தால் 60 பேர் பலி
இலங்கையில் பதிவான முதல் கோவிட் அலைக்குப் பின்னர் தனிமைப்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவை மீறியமைத் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்களில் கால் பகுதிக்கும் குறைவானவர்களே சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவை மீறியமை மற்றும் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் 72,113 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 15,908 பேர் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளதோடு, 1,717 வாகனங்களையும் காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.
நாடு ஓரளவு மூடப்பட்டிருக்கும் நேரத்தில் தனிமைப்படுத்தல் மற்றும் ஊரடங்கு சட்ட மீறல் குறித்து ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்த, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி, சட்டத்தரணி நிஹால் தல்துவ இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, நாடு முழுவதும் பரவி வரும் கொடிய தொற்றுநோயைக் கட்டுப்படுத்த நாடு முடக்கப்பட்ட நிலையில் வீதி விபத்துகளில் 60ற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளமை தெரியவந்துள்ளது.
ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்ட ஆகஸ்ட் 20 முதல் செப்டம்பர் 13 வரை, வீதியில் காணப்படும் நெரிசலற்ற நிலைமையைத் தவறாகப் பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் மற்றும் கார்கள் மூலமாக 63 விபத்துகள் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்துகளில் 66 பேர் உயிரிழந்துள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி நிஹால் தல்துவ குறிப்பிட்டுள்ளார். இந்த விபத்துகளுக்குக் கவனக்குறைவாக வாகனத்தைச் செலுத்தியமை மற்றும் 56 விபத்துக்கள் கவனக்குறைவாக கார் மற்றும் மோட்டார் சைக்கிளைச் செலுத்தியமையால் ஏற்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
வீதி விபத்தில் உயிரிழந்த 66 பேரில் 31 பேர் மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதால் உயிரிழந்துள்ளனர்.

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri

மூன்றாம் உலகப்போர் வெடித்தால்... பிரான்சுடன் அணு ஆயுத ஒப்பந்தம் செய்துகொள்ளும் பிரித்தானியா News Lankasri

சரிகமப சீசன் 5 போட்டியாளர்களுக்கு மாபெரும் பரிசுத் தொகை அறிவிப்பு... இத்தனை லட்சத்தில் வீடா? Cineulagam
