நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற சிவராத்திரி சிறப்பு வழிபாட்டு நிகழ்வுகள் (LIVE)
இன்று சிவராத்திரி விரதம் கொண்டாடப்படும் நிலையில், சிவன் பக்தர்கள் கோவில்களுக்கு படையெடுத்து வருகின்றனர்.
மகா சிவராத்திரி இந்துக்களால் கொண்டாடப்படும் சிவனுக்குரிய விரதமாகும். இவ்விரதம் ஆண்டுதோறும் மாசி மாதத்தில் வரும் கிருஷ்ணபட்ச (தேய்பிறை) சதுர்த்தசி திதியில் கொண்டாடப்படுகின்றது.
இந்துக்களின் மிக முக்கியத்துவம் மிக்கதாகவும் அற்புதம் கொண்டதாகவும் கருதப்படும் மகா சிவராத்திரியை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் ஆலயங்களில் நான்கு கால பூஜை வழிபாடுகள் சிறப்பாக இடம்பெற்று வருகின்றது.
கொழும்பு
சிலாபம் முன்னேஸ்வரம்
வரலாற்று பிரசித்திபெற்ற பஞ்ச ஈச்சரங்களில் ஒன்றான சிலாபம் முன்னேஸ்வரம் ஆலயத்தில் சிவ விரதங்களில் ஒன்றான மகா சிவராத்திரி விரத விசேட பூஜை வழிபாடுகள் சிறப்பாக ஆரம்பமாகி இடம்பெற்று வருவதாக ஆலயத்தின் தர்மகர்த்தா பிரம்மஸ்ரீ பத்மானந்த குருக்கள் தெரிவித்துள்ளார்.
ஹட்டன்
மஹா சிவராத்திரியினை முன்னிட்டு மலையகத்தில் உள்ள சிவ ஆலயங்களில் விசேட பூஜை வழிபாடுகளும் பல்வேறு நிகழ்வுகளும் இன்று இடம்பெற்றுள்ளன.
அந்த வகையில், மஹா சிவராத்திரி தினத்தினை முன்னிட்டு ஹட்டன் ஜோதிலிங்க ரத பவனி இன்று (18) ஹட்டனில் இடம்பெற்றுள்ளது.
மன்னார் திருக்கேதீஸ்வரம்
2023 ஆண்டுக்கான மஹா சிவராத்திரி நிகழ்வானது இன்று சனிக்கிழமை (18) மன்னாரில் பாடல் பெற்ற தளமான திருக்கேதீஸ்வரத்தில் சிறப்பாக இடம்பெற்றுள்ளது.
இலங்கையின் வடக்கி,கிழக்கு மற்றும் தென் பகுதிகளிலிருந்து ஐந்து இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் வருகை தந்ததோடு வெளிநாடுகளிலும் இருந்து விசேடமாக பக்தர்கள் வருகை தந்திருந்தனர்.
வரலாற்று சிறப்பு மிக்க பஞ்ச ஈஸ்வரங்களின் ஒன்றான யாழ். கீரிமலை, நகுலேஸ்வர், நகுலாம்பிகை தேவஸ்தானத்தின் முத்தேர் இரதோற்சவம் இன்று மிகச்சிறப்பாக இடம்பெற்றது.
மஹா சிவராத்திரி நன்நாளில் பல பாகங்களில் இருந்தும் பக்தர்கள் வருகை தந்த கலந்துகொண்டு இஷ்டசித்திகளை பெற்றுச்சென்றுள்ளனர்.
யாழ்ப்பாணம் - கீரிமலை
வரலாற்று சிறப்புமிக்க பஞ்ச ஈச்சரங்களின் ஒன்றாக விளங்கும் யாழ்ப்பாணம் - கீரிமலை நகுலேஸ்வரர் ஆலயத்தில் மஹா சிவராத்திரி பூஜை நிகழ்வுகள் சிறப்பாக இடம்பெற்றுள்ளது.
முல்லைத்தீவு
இலங்கையின் தான் தோன்றீஸ்வரங்களில் ஒன்றாகிய ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தின் மஹா சிவராத்திரி மிகவும் சிறப்பாக இடம்பெற்று வருகின்றது.
முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் நகரில் தான்தோன்றி ஈஸ்வரராக இருந்து மக்களுக்கு அருள்பாளித்து வருகின்ற ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மஹா சிவராத்திரி நிகழ்வு இன்று மாலை விசேட பூஜைகளுடன் ஆரம்பமாகியுள்ளது.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 4 நாட்கள் முன்

6 நாள் முடிவில் சிவகார்த்திகேயனின் மதராஸி திரைப்படம் தமிழகத்தில் செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam

சிறுவயதில் முத்துவிற்கு என்ன ஆனது, மனோஜ் என்ன செய்தார்... சிறகடிக்க ஆசை சீரியல் ஷாக்கிங் புரொமோ... Cineulagam

ஈஸ்வரிக்கு ஆபத்து.. திருமண பிரச்சனைக்கு நடுவில் அடுத்த ஷாக்! எதிர்நீச்சல் தொடர்கிறது ப்ரோமோ Cineulagam
