இலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலை - 11 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
இலங்கைக்கு வட கிழக்கே நிலைகொண்டிருந்த குறைந்த அழுத்த மண்டலம், இன்று முதல் இலங்கையை விட்டு விலகிச் செல்லும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அது படிப்படியாக பலவீனமடையும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
எனினும் நிலவும் மழை நிலைமை இன்றும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் புத்தளம் மாவட்டத்தில் கொட்டுக்கச்சிய பாடசாலை வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேல், சப்ரகமுவ, மத்திய, தெற்கு, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் அனுராதபுரம் மாவட்டத்திலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லிமீட்டருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
மண்சரிவு அபாய எச்சரிக்கை
நாட்டின் ஏனைய பகுதிகளில் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் மழை பெய்யக்கூடும். பதுளை, களுத்துறை, கேகாலை, மாத்தளை, மொனராகலை, இரத்தினபுரி, காலி, கண்டி, குருநாகல், மாத்தறை மற்றும் கண்டி ஆகிய 11 மாவட்டங்களுக்கு முதலாம் மற்றும் இரண்டாம் கட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக காலி, இரத்தினபுரி மற்றும் களுத்துறை மாவட்டங்களில் மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன. கடந்த 24 மணித்தியாலங்களில் அதிகபட்ச மழையாக புத்தளம் பகுதியில் 256.2 மில்லி மீற்றர் மழை பதிவாகியுள்ளது.
அத்தனகலு ஓயா, நில்வளா, கிங், களு மற்றும் மகுரு ஆகிய ஆறுகள் தற்போது அபாய மட்டத்தில் இல்லை என நீர்ப்பாசன திணைக்களம் அறிவித்துள்ளது. அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மற்றும் நீர்ப்பாசன திணைக்களம் வழங்கும் அறிவுறுத்தல்களை பின்பற்றுமாறு லெப்டினன்ட் கமாண்டர் ஏ.எம்.சி.பி. அபேசிங்க பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.
அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம்
தற்போது பெய்து வரும் கடும் மழை காரணமாக நீர்ப்பாசன திணைக்களத்தின் கீழ் உள்ள 18 பிரதான நீர்த்தேக்கங்களும், 18 நடுத்தர அளவிலான நீர்த்தேக்கங்களிலும் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளது. நீர்த்தேக்கங்களின் மொத்த நீர் கொள்ளளவு 71 சதவீதத்தைத் தாண்டியுள்ளது.

இதனால் சில பகுதிகளில் வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. எப்படியிருப்பினும், காசல்ரீ, மவுசாக்கலை, விக்டோரியா உள்ளிட்ட மின் உற்பத்தி நிலையங்களைச் சூழவுள்ள பகுதிகளில் குறிப்பிடத்தக்க மழை வீழ்ச்சி பதிவாகவில்லை.
கடல் பகுதிகளில் காற்றின் வேகம் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 50-60 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் என்பதால், கடற்றொழிலாளர்கள் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
புத்தளம் பிரதேச செயலகப் பிரிவில் மாத்திரம் 474 குடும்பங்களைச் சேர்ந்த 1264 நபர்கள் பாதுகாப்பான 6 மத்திய நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
விபத்தில் சிக்கிய சோழன்.. மருத்துவமனையில் அனுமதி.. கதறி அழும் நிலா.. அய்யனார் துணை சீரியல் Cineulagam
மீனா அம்மா வீட்டிற்கு வந்ததும் கிண்டல் செய்து சிரித்த விஜயா, என்ன நடந்தது?... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
50 ஆண்டுகளின் பின் சனி ஜெயந்தியில் உருவாகும் ராஜயோகம்: இந்த ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை உறுதி! Manithan
ஜனனி செய்த காரியம், குணசேகரன் மீது வருத்தத்தில் ஈஸ்வரி... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் Cineulagam