ஆறு இஸ்லாமிய அமைப்புகளின் தடை நீக்க தீர்மானம்: எச்.எம்.எம். ஹரீஸ்
தடைசெய்யப்பட்ட முஸ்லிம் அமைப்புக்களிலிருந்து ஆறு அமைப்புக்களை நீக்குவது தொடர்பில் நடவடிக்கை எடுக்க ஜனாதிபதியின் பணிப்புரைக்கு இணங்க அமைச்சின் அதிகாரிகளுடனான கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் கருத்து தெரிவித்துள்ளார்.
ஊடக சந்திப்பொன்றில் இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ளார்.
அதற்கமைய, தடைசெய்யப்பட்டுள்ள 11 முஸ்லிம் அமைப்புக்களிலிருந்து 06 அமைப்புக்களின் தடையை நீக்குவது தொடர்பில் பல்வேறு விடயங்களை கலந்துரையாடி அதற்கான மேலதிக நடவடிக்கைகளை பாதுகாப்பு துறையினர் மேற்கொண்டுள்ளது.
தடைநீக்க பாதுகாப்பு அமைச்சு நடவடிக்கை
தடையை நீக்கவுள்ள ஆறு அமைப்புக்களின் பிரதிநிதிகளை தனித்தனியாக சந்தித்து பேச நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.
துரிதகதியில் தடைநீக்க அறிவிப்பை வெளியிட பாதுகாப்பு அமைச்சு நடவடிக்கை எடுத்து வருகின்றது என தெரிவித்துள்ளார்.
இந்த கூட்டத்தில் திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி
எச்.எம்.எம். ஹரீஸ், அனுராதபுர மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இசாக் ரஹ்மான்
ஆகியோர் கலந்துகொண்டு முஸ்லிம் அமைப்புக்களின் தடைநீக்கத்துக்கான
நியாயப்பாடுகள் தொடர்பில் விளக்கத்தை முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஈழத் தமிழர் விடுதலைக்கு இனிச் செய்ய வேண்டியது என்ன..! 22 மணி நேரம் முன்

வீட்டிற்குள் வந்த பார்கவி, அடுத்த திட்டத்தை போடும் குணசேகரன், என்ன அது.. எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam

8 மடங்கு வேகமாக தாக்கும் ஹைப்பர்சோனிக் ஏவுகணை.., இந்தியாவால் பாகிஸ்தான், சீனாவுக்கு சிக்கல் News Lankasri

படுக்கையில் நெப்போலியன் மகன்... எலும்பும் தோலுமாக மாறியதற்கு என்ன காரணம்? நேரில் சந்தித்த பிரபலம் Manithan
