செவ்வந்தி கைது: அரச தரப்பால் கசிந்த தகவல் - பரபரப்பான பொலிஸார்
செவ்வந்தி கைது செய்யப்பட்ட விடயம் அரசாங்கத்தின் பிரபல அரசியல்வாதியால் ஊடகங்களுக்கு கசிந்தமை தொடர்பில் குற்றவியல் விசாரணை அதிகாரிகள் பெரும் கவலையில் இருப்பதாக உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன், பொலிஸ் உயரதிகாரிகளாலும் சில தகவல்கள் வெளியில் செல்லலாம் எனவும் தெரியவந்துள்ளது. பொலிஸாரின் உள்ளக செயற்பாடுகளில் பெரும் குழப்பம் நிலவுகிறது.
பேணப்பட்ட இரகசியம்
செவ்வந்தியின் கைது மற்றும் அவர் இலங்கைக்கு அழைத்து வரும் வரை தகவல்கள் வெளிசெல்லாமல் இரகசியம் பேணப்பட வேண்டும் என பொலிஸ் மா அதிபரால் தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஏனென்றால் கெஹெல்பத்தர பத்மே உள்ளிட்ட குழுவினர் கைதான செய்தி கசிந்த உடன் அவர்களுடன் தொடர்பில் இருந்த பலர் நாட்டைவிட்டு தப்பி சென்றுள்ளனர்.
மேலும் சாட்சியங்களை மறைப்பதற்கும் திரிபுபடுத்துவதற்கும் செயற்பட்டமை தெட்டத் தெளிவாகியுள்ளது.
சம்பத் மனம்பேரி கொல்களன்களை மறைப்பதற்கும் அவர் ஒளிந்திருந்தமையும் இவ்வாறு தகவல் வெளிவந்தால் என்ற காரணத்தால் குறித்த நேபாள் கைது தொடர்பில் ஊடகங்களுக்கு தகவல் போகக் கூடாது என முடிவெடுக்கப்பட்டிருந்தது.
தகவல் கசிவு
அது அவ்வாறிருக்க தகவல் கசிந்ததால் இவர்களின் வலையமைப்பு மற்றும் சங்கிலி தொடரில் மேற்கொண்ட குற்றச் செயல்களின் சில சாட்சியங்கள் மறைக்கப்படலாம் என விசாரணை அதிகாரிகள் நம்புகின்றனர்.
கெஹல்பத்ரே பத்மேவிடம், சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி லின்டன் த சில்வா விசாரணை நடத்தியபோது, செவ்வந்தி, டுபாய் நாட்டுக்கு தப்பியோடி விட்டதாக கூறியுள்ளார்.
பரிசோதனைகளை திசைதிருப்பி செவ்வந்தி தப்பி செல்லவே பத்மே அவ்வாறு தெரிவித்துள்ளார் என சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஓலுகல திட்டத்தை தொடர்ந்த நிலையில், அவர் பொலிஸாருக்கு தனக்கு ஏற்பட்ட சுகயீனத்தால் விடுமுறையில் செல்வதாக குறிப்பிட்டு புலனாய்வு அதிகாரிகளுடன் நேபாளம் சென்றுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



