கிளிநொச்சியில் இரண்டு இடங்களில் தங்கியிருந்த செவ்வந்தி.. பின்னணியில் முக்கிய புள்ளி
நேபாளத்தில் கைது செய்யப்பட்ட இஷாரா செவ்வந்தி தொடர்பில் இதுவரை புலனாய்வாளர்களால் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியிடப்பட்டு வருகின்றன.
செவ்வந்தி விவகாரம் மிகப்பெரிய பூதாகரமாகிக் கொண்டிருக்கின்ற நிலையில், தமிழர் பிரதேசங்களில் செவ்வந்திக்கு அடைக்கலம் கொடுத்தார்கள் என்ற குற்றச்சாட்டில் கைதுகளும் விசாரணை நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள செவ்வந்தி, தான் கிளிநொச்சியில் தலைமறைவாகியிருந்த இடங்கள் தொடர்பில் அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.
புலனாய்வு தகவல்கள்
இதனை தொடர்ந்து, செவ்வந்தி விசாரணைகளுக்காக கிளிநொச்சிக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார்.
இதற்கிடையில், செவ்வந்தியை பாதுகாக்க கெஹல் பத்ர பத்மே கோடிக்கணக்கான பணம் செலவிட்டதாக முன்னதாகவே தெரிவிக்கப்பட்டிருந்து.
அந்தவகையில் தற்போது தமிழர் பகுதியிலும் பலருக்கு இவ்வாறு பணம் கை மாற்றப்பட்டுள்ளமை விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
எனவே, இவ்வாறு செவ்வந்தியை நாடுகடத்த உதவிய விடயத்தில் சம்பந்தப்பட்ட பல முக்கிய நபர்கள் தொடர்பிலும் தகவல்கள் தெரிய வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன், குறித்த நபர்களின் பணம் மற்றும் சொத்துக்கள் விரைவில் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்படலாம் எனவும் கூறப்படுகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




