செவ்வந்தியின் தோற்றத்தில் நேபாளத்தில் சிக்கிய பெண்! புலனாய்வாளர்கள் வெளியிட்ட தகவல்
நேபாளத்தில் இஷாரா செவ்வந்தியுடன் கைது செய்யப்பட்ட மற்றொரு பெண் விசாரணைக்கு முக்கியமான நபர் என்றும், அவரை நாட்டிற்கு அழைத்து வந்த பிறகு விசாரிப்பதன் மூலம் பல தகவல்கள் வெளிவரலாம் என சிஐடியினர் தெரிவித்துள்ளனர்.
சாவகச்சேரியைச் சேர்ந்த தக்ஷி என்ற பெண்ணே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் இஷாரா செவ்வந்தியைப் போலவே தோற்றமளிக்கும் பெண் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த தமிழ் பெண்ணின் புகைப்படங்கள் மற்றும் பதிவுகளைப் பயன்படுத்தி போலி பாஸ்போர்ட்டைப் பெற்று அவரது பெயரில் ஐரோப்பாவிற்குத் தப்பிச் செல்ல செவ்வந்தி திட்டமிட்டிருந்ததாக தெரியவந்துள்ளது.
சர்வதேச பொலிஸாரால் சிவப்பு அறிவிப்பு
இஷாரா செவ்வந்தியுடன் மற்றைய சந்தேகநபர்களும் இன்று நாடு கடத்தப்பட உள்ளதுடன்,செவ்வந்தியை அழைத்து வர திட்டமிடப்பட்டுள்ள அதே விமானத்தில் அவர்கள் நாட்டிற்கு அழைத்து வரப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
இதற்காக ஏற்கனவே இலங்கை விமானம் ஒன்று தயாராக இருப்பதாக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்த சந்தேகநபர்களில், இஷாரா செவ்வந்திக்கு மட்டுமே சர்வதேச பொலிஸாரால் சிவப்பு அறிவிப்பு பிறப்பிக்கப்பட்டுள்ளதுடன், அவரை நாட்டிற்கு அழைத்து வர நேபாளம் சென்றதாக மூத்த பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
குறித்த கைது நடவடிக்கையில், இஷாரா செவ்வந்தி, கம்பஹா பாபா, நுகேகொட பேபி, ஜேகே பாய், போலி செவ்வந்தி(தக்சி), ஜப்னா சுரேஷ் என்ற சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஜே.கே. பாய் எனும் நபரின் உதவி
இஷாரா மற்றும் அந்த பெண்ணைத் தவிர, கைது செய்யப்பட்ட மற்றைய இரண்டு சந்தேகநபர்கள் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள் எனவும், மற்றைய இரண்டு சந்தேக நபர்களும் கொழும்பு மற்றும் கம்பஹாவைச் சேர்ந்தவர்கள் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவர்கள் நேபாளத்தில் காத்மாண்டு பகுதியில் உள்ள ஒரு ஆடம்பர வீட்டில் அதிக வாடகை கொடுத்து மறைந்திருந்துள்ளமை தெரியவந்துள்ளது.
இவர்கள் கெஹல்பத்தர பத்மேவின் ஆதரவாளர்கள் என்றும் அவர்கள் போதைப்பொருள் கும்பலில் ஈடுபட்டவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது.
இதன்பின்னர், விசாரணை அதிகாரிகள் நீதிமன்ற வளாகத்தில் அமைந்துள்ள சிசிடிவி கமராக்களை ஆய்வு செய்தபோது, துப்பாக்கிச் சூட்டுக்கு உதவியாக ஒரு பெண்ணும் வந்திருப்பது தெரியவந்தது.
சட்ட புத்தகத்தில், துப்பாக்கிச் சூட்டுக்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியை சம்பந்தப்பட்ட பெண் கொண்டு வந்திருப்பது தெரியவந்தது. அதன்படி, பொலிஸார் நடத்திய விசாரணைகளில், அவர் மினுவாங்கொடையைச் சேர்ந்த இஷாரா செவ்வந்தி என்ற பெண் என அடையாளம் காணப்பட்டார்.
குற்றத்தைச்செய்த பிறகு, இஷாரா செவ்வந்தி மித்தெனியா பகுதியிலிருந்து ஜே.கே. பாய் எனும் நபரின் உதவியுடன் இந்தியாவுக்கு தப்பிச்சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
செவ்வந்தியின் திட்டம்
இந்தோனேசியாவில் கெஹல்பத்தர பத்மே உட்பட ஐந்து பாதாள உலகக் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு நாட்டிற்கு அழைத்து வரப்பட்ட பின்னர், குற்றப் புலனாய்வுத் துறை கனேமுல்லே சஞ்சீவாவின் கொலை உட்பட பல கொலைகள் குறித்த தகவல்களைக் கண்டறிந்துள்ளது.
இதன்போது கெஹல்பத்தர பத்மேவின் விசாரணையின் அடிப்படையில், இஷாரா செவ்வந்தியின் மறைவிடம் பற்றிய தகவல்களைக் கண்டறிந்த சிஐடி அதிகாரிகள், இது குறித்து நேபாள பொலிஸாருக்கும் தகவல் வழங்கியுள்ளனர்.
கணேமுல்ல சஞ்சீவ என அழைக்கப்படும் சஞ்சீவ குமார சமரரத்ன கடந்த பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதி புதுக்கடை பிரதான நீதவான் நீதிமன்றத்தின் அறை இலக்கம் 5 நீதிமன்ற அறையில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டிருந்தார்.
இதனையடுத்து முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் இந்தகொலை கெஹல்பத்தர பத்மேவின் குழுவால் மேற்கொள்ளப்பட்டமை தெரியவந்தது. கெஹல்பத்தர பத்மாவின் தந்தை கொலை செய்யப்பட்டமைக்கு பழிவாங்கும் நோக்கில் கணேமுல்ல சஞ்சீவ படுகொலை செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இது குறித்து சந்தேகநபர்களிடம் விசாரித்தபோது, இந்த தமிழ் பெண்ணின் புகைப்படங்கள் மற்றும் பதிவுகளைப் பயன்படுத்தி போலி பாஸ்போர்ட்டைப் பெற்று அவரது பெயரில் ஐரோப்பாவிற்குத் தப்பிச் செல்ல செவ்வந்தி திட்டமிட்டிருந்ததாக தெரியவந்துள்ளது.
கெஹல்பத்தர பத்மேவின் ஆலோசனையின் பேரில் ஜே. கே.பாய் என்ற சந்தேகநபர் இதற்கான அனைத்து உதவிகளையும் செய்துள்ளமை கண்டுபடிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





உன்னால ஒரு மண்ணும் செய்ய முடியாது தர்ஷன் கொடுத்த பதிலடி, குணசேகரனின் அடுத்த அதிரடி.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
