விமுக்தி குமாரதுங்க அரசியலுக்கு வருகின்றாரா? குமார வெல்கம வெளியிட்ட சூட்சும பதில்
எதிர்காலத்தில் அரசியலுக்கு நல்ல தலைவர்கள் வருவார்கள் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.
இந்த நாட்டில் நன்கு அறியப்பட்ட குடும்பத்தின் நன்கு படித்த தலைவர் ஒரு புதிய அமைப்பின் மூலம் பொதுமக்களுக்கு அறிமுகப்படுத்தப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
"நீங்கள் விமுக்தி குமாரதுங்க அரசியலுக்கு வருவதற்கு வழி வகுக்க முயற்சிக்கிறீர்களா?" என ஊடகவியலாளர்கள் கேள்வியெழுப்பினர். இதற்கு பதிலளித்து பேசிய அவர்,
"யாரோ ஒருவராக இருப்பார், நான் அதைச் சொல்லவிரும்பவில்லை, அது விமுக்தி குமாரதுங்கவா அல்லது அந்தப் பெயரா அல்லது இந்தப் பெயரா என்று நான் சொல்லப் போவதில்லை" என்றார்.
எவ்வாறாயினும், அரசியல் பின்னணி கொண்ட ஒரு இளம், நன்கு படித்த தலைவர் முன் வருவார் என்று குமார வெல்கம மேலும் தெரிவித்துள்ளார்.
ஒரு பூப்புனித நீராட்டு விழாவும் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டமும் 8 மணி நேரம் முன்
வன்முறையாக உருவெடுப்பதற்கு முன்னர் தடுத்து நிறுத்துங்கள் - தமிழக முதல்வருக்கு யாழ்.கடற்றொழிலாளர் அமைப்பு கோரிக்கை!
கட்டுவான தீ விபத்தில் 5 பேர் பலி..! பலத்த தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட தொழிலாளர்கள்: தீயை கட்டுப்படுத்த கடும் பிரயத்தனம்