மிதிகம பகுதியில் மீண்டும் துப்பாக்கிச் சூடா..! ஹோட்டலை சுற்றிவளைத்த பொலிஸார்
மேல் மாகாண வடக்கு குற்றவியல் பகுதியின் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ரொஹான் ஓலுகல மிதிகம பகுதிக்கு திடீர் விஜயம் செய்து விசேட தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ரொஹான் ஓலுகலவுக்கு கிடைத்த இரகசிய தகலுக்கமைய நேற்று (19.112025) அதிகாலை மிதிகமவில் அமைந்துள்ள சுற்றுலா ஹோட்டல் ஒன்றுக்கு சென்றுள்ளார்.
சந்தேக நபரிடம் நடத்திய விசாரணை
குறித்த சுற்றுலா ஹோட்டலின் உரிமையாளர் மற்றும் அவரின் உறவினர்களை கொலை செய்வதற்கான சதித் திட்டம் தீட்டப்பட்டுள்ளதாகவே ஓலுகலவுக்கு தகவல் கிடைத்துள்ளது. மிதிகமவில் பகுதியில் உள்ள ஒரு வீட்டை பரிசோதனை செய்ததில் டி56 ரக துப்பாக்கியுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தங்காலை பகுதியைச் சேர்ந்த 35 வயதான சந்தேக நபரிடமிருந்து மோட்டார் சைக்கிள் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.

சந்தேக நபரிடம் நடத்திய விசாரணைகளில் திட்டமிடப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் கும்பலைச் சேர்ந்த 'ஆமி சூட்டி' என்பரின் வேண்டுகோளின் பேரில் இந்த கொலையை செய்ய விருந்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார்.
மேலும் சுற்றுலா ஹோட்டலின் உரிமையாளர் அவர்களின் உறவினர்களுக்கு குறித்த ஹோட்டலிலேயே நடத்த விருத்த விருந்துபசாரத்திலே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட விருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |