கொழும்பு துறைமுக நகரில் செல்பி எடுக்கவும் கட்டணமா?
கொழும்பு துறைமுக நகரில் எடுக்கப்படும் செல்பி மற்றும் தனிப்பட்ட காணொளிகளுக்கு பணம் செலுத்தத் தேவையில்லை என கொழும்பு துறைமுக நகர திட்ட நிறுவனம் தெரிவித்துள்ளது.
இவ்வாறு கட்டணம் வசூலிக்கப்படுவதாக சமூக வலைதளங்களில் பரவி வரும் வதந்திகள் உண்மைக்குப் புறம்பானவை என நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும் துறைமுக நகரத்தில் தனிப்பட்ட நிகழ்வுகள், வணிக புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களுக்கு கட்டண முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அதற்கமைய, தனிப்பட்ட நிகழ்வுகள், திருமண நிகழ்வுகள், Fashion show, பாடல் தயாரிப்பு, விளம்பரங்கள் அல்லது வேறு வகையான வர்த்தக நடவடிக்கைகளுக்காக மேற்கொள்ளப்படும் புகைப்படங்கள் மற்றும் வீடியோ எடுப்பதற்காக மாத்திரம் கட்டணம் அறவிடப்படும்.
கொழும்பு துறைமுக நகரத்தில் அண்மையில் திறக்கப்பட்ட பகுதியில் புகைப்படம் எடுத்தல் மற்றும் வீடியோ பதிவு நடவடிக்கைகளுக்காக அறவிடப்படும் கட்டணங்கள் அண்மையில் அறிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
