ஹோட்டலில் பொலிஸார் திடீர் சுற்றிவளைப்பு - கொழும்பை சேர்ந்த பல இளைஞர், யுவதிகள் கைது
கம்பஹா, பியகம பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் பொலிஸார் மேற்கொண்ட திடீர் சோதனையில் இளைஞர்கள், யுவதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்றுகாலை பேஸ்புக் ஊடாக நண்பர்களாகியவர்கள் நடத்திய விருந்தில் ஈடுபட்ட யுவதிகள் உட்பட 14 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பொலிஸார் சோதனை

இந்த இளைஞர் குழுவினர் நேற்று முன்தினம் இரவு இந்த இடத்திற்கு வந்து, மறுநாள் காலை வரை விருந்து வைத்துள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் அங்கு சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இளைஞரொருவரிடம் 40 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் காணப்பட்டதாகவும், ஏனைய குழுவினரிடம் போதைப்பொருள் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேஸ்புக் விருந்து

அதற்கமைய, போதைப்பொருளுடன் கண்டுபிடிக்கப்பட்ட இளைஞனை மஹர நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டதுடன், ஏனைய குழுவினர் கடுமையாக எச்சரிக்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
கொழும்பு, கொட்டாஞ்சேனை உள்ளிட்ட பல்வேறு பிரதேசங்களில் வசிக்கும் இந்த இளைஞர்கள் 25 வயதுக்குட்பட்டவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.
you may like this video...
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri
Bigg Boss: ரெட் கார்டு பெற்றும் வெளியேற மறுத்த போட்டியாளர்... மண்டியிட்டு மன்னிப்பு கேட்ட தருணம் Manithan
ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri