சர்வதேச பொலிஸாரின் உதவியுடன் இலங்கைக்கு அழைத்து வரப்படவுள்ள நிரூபமா ராஜபக்ச?

London Money Mahindha Rajapaksha Nirupama Rajapaksa pandora docunents
By Dhayani Oct 10, 2021 10:23 PM GMT
Report

பண்டோரா ஆவண சர்ச்சையில் சிக்கியுள்ள முன்னாள் அமைச்சர் நிரூபமா ராஜபக்சவுக்கு இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு விசாரணைக்கு அழைப்பு விடுக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தற்போது அவர் நாட்டை விட்டு வெளியேறி லண்டன் சென்றுள்ளதாகவும்,எனினும் அவர் விசாரணைக்கு வருகை தராவிட்டால் சர்வதேச பொலிஸார் ஊடாக அவரை இலங்கைக்கு வரவழைக்க நடவடிக்கை எடுக்கப்படலாம் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சட்டவிரோதமாக வெளிநாடுகளில் கோடிக்கணக்கில் பினாமி சொத்துக்கள் வாங்கிக் குவித்த பிரபலங்களின் பெயர்களை “பண்டோரா ஆவணங்கள்” அண்மையில் வெளியிட்டிருந்தது.

பல உலக தலைவர்களின் இரகசியங்களை வெளிக்கொண்டு வந்துள்ள, பண்டோரா ஆவணங்களில் இலங்கையின் பிரபல தொழிலதிபர் திருக்குமார் நடேசனின் மனைவியும், ராஜபக்சர்களின் நெருங்கிய உறவினருமான, நிரூபமா ராஜபக்ஷவின் பெயரும்,கடந்த மூன்றாம் திகதி வெளியானது.

நிரூபமா ராஜபக்சவின் கணவர் திருக்குமார் நடேசன் பல இரகசிய நிறுவனங்கள் மூலம் செய்த பரிவர்த்தனைகள் குறித்த தகவல்களும் பண்டோரா ஆவணத்தில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

பண்டோரா ஆவணத்தில் கூறப்பட்டுள்ளதன் படி, 2011ம் ஆண்டு நிலவரப்படி திருக்குமார் நடேசனின் சொத்துக்களின் பெறுமதி 160 மில்லியன் டொலர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில்,பண்டோரா ஆவணங்கள் வெளியாகுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு நிரூபமா ராஜபக்ச நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாகவும்,சர்வதேச பொலிஸார் ஊடாக அவர் நாட்டிற்கு அழைக்கப்படவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரதமர் மஹிந்த ராஜபக்ச, ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில், நிரூபமா ராஜபக்ச, பிரதியமைச்சராக பதவி வகித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்...

நாட்டை விட்டு வெளியேறிய நிருபமா ராஜபக்ச? சிங்கள ஊடகம் தகவல்

தென்னிலங்கை அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இரகசிய ஆவணம்


1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
அகாலமரணம்

கொழும்பு, பெங்களூர், India, Chennai, India

05 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US