எதிரணிகள் ஒன்றிணைவு சாத்தியப்படுமா..! சந்தேகம் வெளியிடும் சுனில் ஹந்துன்நெத்தி
எதிரணிகள் ஒன்றுபட வேண்டும். அது நல்லது. அதனை நாம் வரவேற்கின்றோம். ஆனால், எதிரணிகள் ஒன்றிணைவு சாத்தியப்படுமா என்பது சந்தேகமே என்று அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.
தேசிய மக்கள் சக்தி அரசுக்கு எதிராக எதிரணிகளால் எதிர்வரும் 21ஆம் திகதி நுகேகொடையில் முன்னெடுக்கப்படவுள்ள பேரணி தொடர்பில் ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
மக்களைத் திரட்டுவதற்கு
மேலும் தெரிவிக்கையில், "எதிரணிகளின் போராட்டம் பற்றி அந்தத் தரப்புகளிடம்தான் கேட்க வேண்டும். இருந்தாலும் எதிரணிகள் ஒன்றுபட வேண்டும். அவ்வாறு ஒன்றிணைவது நல்லது. ஆனால், அது சாத்தியப்படுமா என்பது சந்தேகமே.

நாம் கூட்டமொன்றை நடத்துவதாக இருந்தால் ஒரு கிழமைக்கு முன்பு இருந்துதான் தயார்படுத்தல் இடம்பெறும். ஆனால், இவர்கள் ஒரு மாதத்துக்கு முன்னரே தயாராகிவிட்டனர்.
மக்களைத் திரட்டுவதற்கு இவர்களுக்கு ஒரு மாதம் செல்லும் என்பது இதன்மூலம் புலப்படுகின்றது.
நாம் எதிரணியில் இருக்கும்போது சிறப்பாகச் செயற்பட்டோம். இணைய வேண்டிய இடங்களில் இணைந்து பயணித்தோம். இது ஜனநாயக பண்பாகும்" என்றும் குறிப்பிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |