இலங்கை வங்கியின் தலைமையகம் வெளிநாட்டவருக்கு விற்பனை செய்யப்படுகின்றதா? - அரசாங்கம் வெளியிட்ட அறிவிப்பு
பிட்டு பம்புவ’என்று பிரபலமாக அறியப்படும் கோட்டையில் உள்ள இலங்கை வங்கியின் தலைமையகத்தை வெளிநாட்டவர் ஒருவருக்கு விற்பனை செய்ய எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மூலதன சந்தைகள் மற்றும் நிறுவன சீர்திருத்த இராஜாங்க அமைச்சர் அஜித் நிவார்ட் கப்ரால் நாடாளுமன்றத்தில் இன்று இதனை தெரிவித்தார்.
இலங்கை வங்கியின் தலைமையகத்தை வெளிநாட்டவருக்கு விற்பனை செய்யபோவதாக கூறி எதிர்க்கட்சி பொதுமக்களை தவறாக வழிநடத்தியுள்ளது. இது முற்றிலும் தவறானது என்று அமைச்சர் கூறியுள்ளார்.
பிரதான வங்கியான இலங்கை வங்கி சரிவின் விளிம்பில் உள்ளது என்பதைக் குறிக்கும் நோக்கத்துடன் எதிர்க்கட்சி தவறான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
பொதுமக்களை தவறாக வழிநடத்துவது பொருளாதாரத்தில் எதிர்மறையான விளைவை ஏற்படுத்தும்.
எனவே பொதுமக்களை தவறாக வழிநடத்த வேண்டாம் என்று எதிர்க்கட்சியிடம் கோருவதாக கப்ரால் கேட்டுக்கொண்டார்.



