கைவேலி சிறுமியின் பொறுப்பற்ற செயல்: பொலிஸில் முறைப்பாடு
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கைவேலி பகுதியில் 14 வயதுடைய சிறுமியினை காணவில்லை எனப் பாதுகாவலர்களால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
விடுமுறை நாளான நேற்று கைவேலி பகுதியில்
பெற்றோரை இழந்த நிலையில் அக்காவுடன் வசித்துவரும் 14 வயதுடைய சிறுமியினை கற்றல்
வகுப்பிற்காகச் சிறுமியின் அத்தான் கொண்டுசென்று விட்டுள்ளார்.
இரவாகியும் சிறுமி வீடு திரும்பாத நிலையில் சிறுமியின் அக்கா புதுக்குடியிருப்பு பொலிஸாருக்கு தகவல் வழங்கியதால் பொலிஸ் நிலையத்தில் பெரும் பரபரப்புடன் தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சிறுமியினை அத்தான் படிப்பதற்காகக் கொண்டுசென்று இறக்கியதும் சிறுமி அத்தானிடம் பணம் வாங்கியுள்ளார்.
இந்த சிறுமி யாருக்கும் சொல்லாம் புதுக்குடியிருப்பில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் நண்பராகப் பழகிக்கொண்ட ஒருவரின் வீட்டிற்குப் பேருந்தில் ஏறிச் சென்றுள்ளார்.
உண்ணாப்பிலவு பகுதியில் உள்ள நண்பி ஒருவரின் வீட்டிற்குச் சென்றுள்ளார். அங்கு வெளிநாட்டில் உள்ள பாடசாலை சிறுமியின் நண்பி எனச் சொல்லப்படும் குடும்ப பெண்ணின் கணவருக்கு நேற்று பிறந்த நாளினை கொண்டாடியுள்ளார்கள்.
இதன் பின்னர் அந்த நண்பியின் தொலைபேசி ஊடாக சிறுமியின் அக்காவிற்கு இரவு 9.00 மணிக்குத் தொடர்பு கொண்டு தான் நிற்கும் இடத்தினை தெரியப்படுத்தியுள்ளார்.
இதன் பின்னர் சிறுமியினை புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் கொண்டுவந்து ஒப்படைத்துள்ளனர்.
இவ்வாறு சிறுவர், சிறுமிகளின் பொறுப்பற்ற செயற்பாடும் அவர்கள் தொடர்பில்
அக்கறைகொள்ளும் பெற்றோர்கள்,பராமரிப்பாளர்கள் சரியாகக்
கண்காணித்துக் கொள்ள வேண்டியது ஒவ்வொரு தாய்மாரின் கடமையாகும்.
