ரூபாவின் பெறுமதி உயர்வு! பொருட்களின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்
ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள உயர்வு காரணமாக பல பொருட்களின் விலைகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
இரும்பு விலை மாற்றம்
இதற்கமைய இந்த ஆண்டின் தொடக்கத்தில் இரும்பு விலை சுமார் 50 சதவீதம் குறைந்துள்ளதாக இரும்பு இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
டொலரின் பெறுமதிக்கு நிகரான ரூபாவின் பெறுமதி வலுவடைந்து வருவதே இதற்கு பிரதான காரணம் என மெல்வா நிறுவனத்தின் பணிப்பாளர் மஹிந்தரத்ன தென்னகோன் தெரிவித்துள்ளார்.
தேயிலை விலை
டொலரின் பெறுமதி வீழ்ச்சியினால் தேயிலையின் விலை பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளதுடன், தேயிலைத் தோட்டக் கம்பனிகளும் நட்ட நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக தோட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த சில மாதங்களில் தேயிலை ஒரு கிலோ 1800-1900 ரூபா வரை விற்பனை செய்யப்பட்டதாகவும், கடந்த வாரம் ஒரு கிலோகிராம் தேயிலை அதிகபட்சமாக 800-900 ரூபா வரை விற்பனை செய்யப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை தேயிலைக்கான உற்பத்தி செலவு அதிகரித்துள்ளதாகவும் தோட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

சீன தயாரிப்பு விமானத்தால் பாகிஸ்தான் சுட்டு வீழ்த்திய 2 இந்திய விமானங்கள்: அமெரிக்க நிபுணர்கள் உறுதி News Lankasri

மஞ்சள் கயிறு, நெற்றியில் குங்குமம்.. நம்ம இனியாவா இது? தனுஷ் பாடலுக்கு வைப் செய்யும் காட்சி Manithan
