அலி கமேனி கொல்லப்பட்டதற்கு பதிலடி : அமெரிக்க துருப்புக்களை குறிவைத்து ட்ரோன் தாக்குதல்
ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள விமான நிலையத்தில் அமெரிக்க துருப்புக்களை குறிவைத்து ட்ரோன் தாக்குதலை நடத்தியதாக ஈராக்கிய ஷியைட் போராளிகள் குழு தெரிவித்துள்ளது.
இது ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அமைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2003 ஆம் ஆண்டு அமெரிக்கா தலைமையிலான
சதாம் உசேனை பதவி கவிழ்த்த 2003 ஆம் ஆண்டு அமெரிக்கா தலைமையிலான ஈராக்கிய படையெடுப்பைத் தொடர்ந்து, அங்கு செயல்படும் ஷியா போராளிக் குழுக்களில் சரயா அவ்லியா அல்-டாம் என்ற குழுவும் ஒன்றாகும்.

இந்தக் கூற்று குறித்து அமெரிக்காவும் ஈராக்கும் உடனடியாக எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை.
அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரானை குறிவைத்து வான்வழித் தாக்குதலை தொடங்கியதில் லெபனான் குழுவான ஹிஸ்புல்லா உள்ளிட்ட ஈரான் ஆதரவு பெற்ற போராளிகள் குழுக்கள் நுழைந்துள்ள நிலையில் இந்தத் தாக்குதல் நடந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.