ஈரானின் ஆதரவுக்கு ஈராக் பிரதமர் பாராட்டு
ஈராக்கிற்கு ஈரான் வழங்கிய ஆதரவையும், குறிப்பாக சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்னர் ஐ.எஸ்.ஐ.எல். அமைப்புக்கு எதிரான போரின்போது வழங்கிய உதவியையும் ஈராக் பிரதமர் அலி அல்-சைதி பாராட்டியுள்ளார்.
ஈரானின் நாடாளுமன்ற சபாநாயகர் முகம்மது பாகர் காலிபாப் ஈராக்கிற்கு மேற்கொண்டுள்ள மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தின்போது, அவருடன் இடம்பெற்ற சந்திப்பில் ஈராக் பிரதமர் இந்தக் கருத்தை வெளியிட்டதாக ஈரானின் அரச செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தச் சந்திப்பின்போது, இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்துதல், கூட்டு நடவடிக்கைகளை முன்னெடுத்தல் மற்றும் பல்வேறு துறைகளில் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்து கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஈரான்–ஈராக் உறவுகளை மேலும் மேம்படுத்தவும், இரு நாட்டு மக்களின் பொதுவான நலன்களை அடைவதற்காக ஒத்துழைப்பை விரிவுபடுத்தவும் ஈராக் அரசாங்கம் மேற்கொண்டு வரும் முயற்சிகளை காலிபாப் பாராட்டியுள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான அரசியல், பொருளாதாரம் மற்றும் ஏனைய துறைகளில் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது தொடர்பிலும் இந்த விஜயத்தின்போது முக்கிய கவனம் செலுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்து சமுத்திரம் லங்கா சமுத்திரமாக மாறுமா..! 2 நாட்கள் முன்
பிரித்தானிய நாடாளுமன்றத்தில் மலர்ந்த காதல் - கேரள பெண்ணை திருமணம் செய்த ஸ்காட்லாந்து எம்.பி News Lankasri