பாம்பின் தலை வெட்டப்பட்டது! IRGC தலைமையகத்தை அழித்த அமெரிக்காவின் அதிரடி அறிக்கை
அமெரிக்க இராணுவம், ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் தலைமையகம் (IRGC) தலைமையகத்தை மிகப்பெரிய தாக்குதலில் அழித்துள்ளதாக உறுதிப்படுத்தியுள்ளது.
United States Central Command (CENTCOM) வெளியிட்ட அறிக்கையில், கடந்த 47 ஆண்டுகளில் 1,000க்கும் மேற்பட்ட அமெரிக்கர்களின் உயிரிழப்புக்கு IRGC பொறுப்பானதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
பாம்பின் தலை வெட்டப்பட்டது
அறிக்கையில், இந்த நடவடிக்கை “பாம்பின் தலை வெட்டப்பட்டது” என விவரிக்கப்பட்டுள்ளது.
மேலும், உலகிலேயே மிக வலிமையான இராணுவம் அமெரிக்காவுக்கே உண்டு என்றும், தற்போது IRGCக்கு தலைமையகம் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. “
The Iranian Islamic Revolutionary Guard Corps (IRGC) killed more than 1,000 Americans over the past 47 years. Yesterday, a large-scale U.S. strike cut off the head of the snake. America has the most powerful military on earth, and the IRGC no longer has a headquarters. pic.twitter.com/WdpN7JBECr
— U.S. Central Command (@CENTCOM) March 1, 2026
கடந்த 47 ஆண்டுகளில் 1,000க்கும் மேற்பட்ட அமெரிக்கர்களை ஈரானின் IRGC கொன்றுள்ளது.
இதற்கிடையில், இஸ்ரேல் இராணுவமும் IRGC கட்டுப்பாட்டில் உள்ள பல ஈரானிய இராணுவ கட்டளை மையங்கள் மீது தாக்குதல் நடத்தியதாக தெரிவித்துள்ளது.
இதில் IRGC உளவுத்துறை தலைமையகம், IRGC வான்படை கட்டளை மையங்கள் மற்றும் உள்நாட்டு பாதுகாப்பு தலைமையகங்களும் அடங்கும்.

இஸ்ரேல் வெளியிட்ட அறிக்கையின்படி, இந்த தாக்குதல்கள் ஈரானின் கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு திறனை கடுமையாக பாதித்துள்ளன.
முக்கிய வசதிகளில் பணியாற்றிய பணியாளர்கள் பலர் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சனிக்கிழமை ஈரானின் உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, அமெரிக்கா–இஸ்ரேல் இணைந்த நடவடிக்கைகள் ஞாயிற்றுக்கிழமை வரை தொடர்ந்தன.
புதிய உச்சத் தலைவர்
ஞாயிற்றுக்கிழமை இரவு தெஹ்ரான் நகரில் வெடிப்புகள் இடம்பெற்றன. தலைநகரின் மையப்பகுதிகளை இலக்காகக் கொண்டு தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் தெரிவித்தது.

அதற்கு பதிலடியாக, ஈரான் இஸ்ரேல், வளைகுடா பகுதியில் உள்ள அமெரிக்க இராணுவ தளங்கள், ரியாத் மற்றும் துபாய் ஆகிய இடங்களை நோக்கி ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை ஏவியது.
இதற்கிடையில், ஞாயிற்றுக்கிழமை முன்னதாக, புதிய உச்சத் தலைவர் தேர்வு செய்யப்படும் வரை நாட்டை நிர்வகிக்க மூவர் கொண்ட இடைக்கால தலைமைக்குழுவில் 66 வயதான மதகுரு அலிரேசா அராஃபி நியமிக்கப்பட்டுள்ளார்.
மத்திய கிழக்கை சூழ்ந்துள்ள போர் மேகம் இந்தியாவையும் ஆக்கிரமிக்கும் அபாயம் - நாடு முழுவதும் பறந்த உத்தரவு
தீவிரமடையும் நிலைமை: டுபாய் - அபுதாபியில் சிக்கியுள்ள வெளிநாட்டவர்களுக்கு விசேட சலுகை - வெளியானது அறிவிப்பு