இலங்கை அருகே... ஈரான் கப்பல் மீது நடந்த தாக்குதல்! பேசுபொருளாகியுள்ள The Gazaவின் முகநூல் பதிவு
மத்திய கிழக்கில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் இன்று இந்தியப் பெருங்கடலில் ஈரானிய போர்க்கப்பலை அமெரிக்கா டார்பிடோ மூழ்கடித்த செய்தி இலங்கை உள்ளிட்ட பல நாடுகளுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தியது.
மேலும், இந்த தாக்குதலில் ஈரான் போர்க்கப்பல் மீது அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் நடத்திய தாக்குதலில் குறைந்தது 80 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் கிடைத்தது.
பேசுபொருளாகும் பதிவு
ஐரிஸ் தேனா போர்க்கப்பலில் இருந்து 32 பணியாளர்களை மீட்டுள்ளதாக இலங்கை அதிகாரிகள் தெரிவித்தனர்.மேலும் பலர் காணாமல் போயுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்தநிலையில், 32 ஈரானிய கடற்படையினரின் உயிரை காப்பாற்றிய இலங்கை கடற்படைக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் த காசா எனும் முகநூலில் “ஸ்ரீ லங்கா” என்று பதிவேற்றியதை அடுத்து சமூக வலைத்தளங்களில் அந்த பதிவு தற்போது பேசுபொருளாகி வருகின்றது.
மேலும், மத்திய கிழக்குப் போர் பதட்டங்களுக்கு மத்தியில் காலி துறைமுகத்திற்கு அருகே தத்தளித்த ஈரானிய கப்பலை இலங்கை கடற்படை மீட்டது என்றும் அவர்கள் பதிவிட்டு நன்றி தெரிவித்துள்ளனர்.
இந்தநிலையில் குறித்த பதிவானது பேசுபொருளாகியுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் பலரும் பல விமர்சனங்களை முன்வைத்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
சன் டிவி சீரியல்களுக்கு டப் கொடுக்கும் விஜய்யின் அய்யனார் துணை சீரியல்... டிஆர்பி விவரம் இதோ Cineulagam
தந்தையை இழந்தேன், மனைவியை இழந்தேன்! ஈரானின் புதிய உச்சத் தலைவரின் உணர்ச்சிமிக்க முதல் உரை News Lankasri
பச்ச குழந்தை விஜய்க்கு என்ன தெரியும்? 40 வயது த்ரிஷா தான் தவறு... தாறுமாறாக கலாய்த்த மருத்துவர்! Manithan