இரவோடு இரவாக ஈரானுக்குள் சென்ற பாரிய கப்பல்.. ட்ரம்பின் முற்றுகையை மீறி அதிரடி நுழைவு!
ஈரானிய கடற்படையின் செயல்பாட்டு ஆதரவுடன், ஒரு ஈரானிய எண்ணெய்க் கப்பல் இரவோடு இரவாக ஈரானின் கடல் எல்லைக்குள் நுழைந்துள்ளதாக ஈரான் இராணுவம் தெரிவித்துள்ளது.
அமெரிக்க கடற்படையின் ஒரு சிறப்புப் படையிடமிருந்து மீண்டும் மீண்டும் எச்சரிக்கைகளும் அச்சுறுத்தல்களும் விடுக்கப்பட்ட போதிலும், அந்தக் கப்பல் தொடர்ந்து பயணித்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
அந்தக் கப்பல் அரபிக்கடலைக் கடந்து, ஈரானின் தெற்குத் துறைமுகங்களில் ஒன்றில் உள்ள நங்கூரமிடும் இடத்தில் பல மணிநேரம் நிறுத்தப்பட்டிருந்ததாக ஈரானிய ஊடகங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் முற்றுகை..
இந்த அறிக்கையை உடனடியாக சர்வதேச ஊடகங்களால் உறுதிப்படுத்த முடியவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஒரு வாரத்திற்கும் மேலாக அமெரிக்கா, ஈரானின் துறைமுகங்களை முற்றுகையிட்டுள்ளது.
இந்த முற்றுகை தொடங்கியதிலிருந்து 27 கப்பல்களைத் திரும்பிச் செல்லுமாறு அல்லது ஈரானிய துறைமுகத்திற்குத் திரும்புமாறு அமெரிக்க இராணுவம் உத்தரவிட்டுள்ளதாக திங்களன்று அமெரிக்க மத்திய கட்டளை மையம் கூறியது.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை, முற்றுகையை மீறிச் செல்ல முயன்ற ஈரானிய சரக்குக் கப்பல் ஒன்றைக் கைப்பற்றியதாக அமெரிக்கா அறிவித்ததைத் தொடர்ந்து, தெஹ்ரான் பதிலடி கொடுக்கும் என அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அண்ணாமலைக்கு தெரியவந்த வீட்டை அடமானம் வைத்த விஷயம், மனோஜிற்கு கொடுத்த தண்டனை... சிறகடிக்க ஆசை சீரியல் புரொமோ Cineulagam
விஜய் - சங்கீதா சேர்ந்து வாழ முடிவு! வதந்திகளுக்கு முற்றுபுள்ளி வைக்கும் எதிர்பாராத திருப்பம் Manithan