டெல்லி செல்லவிருந்த பாரிய ஈரானிய விமானத்தை குறிவைத்து தாக்கிய அமெரிக்கா
இந்தியாவிற்கு உதவிப் பணிக்காகச் செல்லவிருந்த ஈரானிய விமானம் அமெரிக்க வான்வழித் தாக்குதலில் சேதமடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
ஈரானிய மக்களுக்கான அத்தியாவசிய மருத்துவப் பொருட்கள் மற்றும் உதவிகளைப் பெறுவதற்காக அந்த விமானம் இந்த வாரம் புது டில்லிக்கு செல்லவிருந்ததாகக் கூறப்படுகிறது.
ஈரானின் மஷ்ஹத் விமான நிலையத்தில் திங்களன்று அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதலில் மஹான் ஏர் விமானம் சேதமடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன், மனிதாபிமான உதவிகளைச் சேகரிப்பதற்காக இந்தியாவிற்குச் செல்லவிருந்த பணி இதனால் பாதிக்கப்படக்கூடும் என்றும் ஈரானிய அதிகாரிகள் கூறியுள்ளனர்.
மனிதாபிமான உதவி
ஈரானிய மக்களுக்கான அத்தியாவசிய மருத்துவப் பொருட்கள் மற்றும் உதவிகளைப் பெறுவதற்காக அந்த விமானம் இந்த வாரம் புது டில்லிக்கு செல்லவிருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்தக் கூற்றை அமெரிக்க அதிகாரிகள் இன்னும் உறுதிப்படுத்தவில்லை. மஷ்ஹத் விமான நிலையத்தில் அமெரிக்கா நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து விமானம் சேதமடைந்ததாக ஈரானிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
வெளியாகியுள்ள சர்வதேச தகவல்களின்படி, அந்த விமானம் ஏப்ரல் 1 ஆம் திகதி புது டில்லியை சென்றடையும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்தியா, ஈரானிய செஞ்சிலுவைச் சங்கம் மூலம் மார்ச் 18 அன்று ஈரானுக்கு மருத்துவப் பொருட்களின் முதல் தொகுப்பை அனுப்பியது. புது டில்லியில் உள்ள ஈரானிய தூதரகம் இந்த உதவிக்காக இந்திய மக்களுக்கு நன்றி தெரிவித்தது.
மஹான் ஏர் என்பது ஒரு தனியார் ஈரானிய விமான நிறுவனமாகும். இது மேற்கு ஆசியா, மத்திய ஆசியா, தெற்காசியா, தென்கிழக்கு ஆசியா மற்றும் கிழக்கு ஆசியா ஆகிய பல நாடுகளில் விமான சேவைகளை இயக்குகிறது.