ஈரானின் ஏவுகணை மற்றும் ட்ரோன் திறனை அழிக்க வேண்டும் – மார்கோ ரூபியோ
மத்திய கிழக்கில் நிலைத்தன்மையை உறுதிப்படுத்த ஈரானின் ஏவுகணை மற்றும் ட்ரோன் (drone) ஆயுத திறன்களை முற்றிலும் அழிக்க வேண்டும் என அமெரிக்க ராஜாங்கச் செயலாளர் மார்கோ ருபியோ தெரிவித்துள்ளார்.
சர்வதேச ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
இப்போது ஈரானை நிர்வகிக்கும் தலைமையைக் கருத்தில் கொண்டால், எதிர்காலத்தில் அவர்கள் அண்டை நாடுகளின் கட்டமைப்புகள் மற்றும் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தும் திறனை அழிப்பதே நிலைத்தன்மைக்கு சிறந்த வழியாகும் என தெரிவித்துள்ளார்.

மேலும், மத்திய கிழக்கு பகுதியில் ஈரான் மேற்கொண்ட தாக்குதல்கள் குறித்து அவர் விமர்சனங்களை வெளியிட்டுள்ளார்.
ஈரான் தாக்கிய இலக்குகளை பார்க்கும்போது, போரில் ஈடுபடாத நாடுகளின் சக்தி வள கட்டமைப்புகளையே அவர்கள் குறிவைத்துள்ளனர் எனவும் இது மிகவும் கவலைக்கிடமானது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், தூதரகங்கள், தூதரக வசதிகள் மற்றும் விமான நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதை அவர் கடுமையாக சாடியுள்ளார்.
இவ்வாறான தாக்குதல்கள் உலகளவில் அரிதானவை. இதுவே ஈரான் மேற்கொண்ட செயல்கள். தற்போது ஈரான் பலவீனமடைந்த நிலையில் உள்ளது என மார்கோ ருபியோ குறிப்பிட்டுள்ளார்.