ஈரானிடம் இருந்து ட்ரம்ப் உலகத்தை காப்பாற்றியுள்ளார்! ஈரானிய நடிகையின் சர்ச்சைக்குரிய பேட்டி
ஈரானுக்கு எதிரான போர் தொடர்பில் ஈரானிய நடிகையான எல்னாஸ் நோரூசி அவுஸ்திரேலியா தொலைக்காட்சிக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியில் ட்ரம்ப் மற்றும் இஸ்ரேலின் நடவடிக்கை தொடர்பில் பல சர்ச்சைக்குரிய தகவல்களை தெரிவித்துள்ளார்.
அந்த செவ்வியில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
ட்ரம்ப் தொடர்பில் தெரிவித்த கருத்து
ஈரானின் அணு ஆயுத மேம்பாட்டு திட்டங்கள் தொடர்பில் நடவடிக்கை எடுப்பதாக 47 வருடங்களாக அமெரிக்காவின் ஜனாதிபதிகள் கருத்து தெரிவித்திருந்தாலும் எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கவில்லை.
ஆனால் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் இஸ்ரேலின் இந்த நடவடிக்கை ஈரானிடமிருந்து உலத்தையே மீட்டுள்ளனர்.
ஈரானின் ஆட்சி தொடர்ந்திருந்தால் உலகத்தில் யாராலும் கட்டுப்படுத்த முடியாத ஒரு நிலையை அடைந்து பெரும் அச்சுறுத்தலாக மாறியிருப்பர்.

நான் சொல்லும் இந்த கருத்தை ஏற்றுக் கொள்ளாமல் இருக்கலாம்.மேலும் இதை கேலிக் குற்றப்படுத்தலாம்.ஆனால் ஈரானின் உண்மைத் தன்மை இதுதான்.நான் ட்ரம்ப் மற்றும் இஸ்ரேலுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் அறிவித்திருந்தார்.
ஈரானின் சர்வாதிகார ஆட்சிக்கு எதிராக எவ்வித எதிர் கருத்துக்களையும் தெரிவிக்க முடியாது.பெண்களுக்கு சுதந்திரமாக செயற்பட முடியாது.

நான் நாட்டைவிட்டு போனதால் பல மொழிகளை கற்றேன்.எனக்கு பிடித்த நடிப்பை தேர்தெடுத்தேன்.ஆனால் இன்றும் எனது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் தொடர்பில் மிகவும் கவலைப்படுகிறேன்.
மேலும் நான் ஒரு மொடலாகவும் பணியாற்றுகின்றேன்.ஈரானில் நான் வசித்திருந்தால் எனக்கு பிடித்த துறையை தேர்ந்தெடுத்திருக்க முடியாமல் போயிருக்கும் என்று குறிப்பிட்டிருந்தார்.