போருக்கு தயார்..! ஈரானின் அதிரடி அறிவிப்பால் மத்திய கிழக்கில் பதற்றம்!
புதிய இணைப்பு
ஈரான் முதலில் தாக்காது, ஆனால் போருக்குத் தயாராக உள்ளது என ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி அறிவித்துள்ளார்.
மேலும், அவர் கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் இஸ்ரேலுடனான 12 நாள் மோதலின் போது இருந்ததை விட ஈரான் "இன்னும் தயாராக" இருப்பதாக தெரிவித்துள்ளார்.
ஈரானில் நிலவி வரும் அமைதியின்மைக்கு மத்தியில் நடந்து வரும் கட்டுப்பாடுகள் பாதுகாக்கப்படுவதாகவும் "இனி எந்த அச்சுறுத்தல்களும் இல்லை என்பதை நாங்கள் உறுதி செய்யும் வரை" அந்த கட்டுப்பாடுகள் தொடரும் என்றும் அவர் கூறியுள்ளார்.
எனவே, போராட்டத்தை கட்டுப்படுத்த ஈரான் மேற்கொள்ளும் நடவடிக்கைகளில் அமெரிக்கா தலையிட்டால் போரை மேற்கொள்ள தயங்க மாட்டோம் என ஈரான் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முதலாம் இணைப்பு
ஈான் மீது அமெரிக்கா தாக்குதல்களை நடத்தினால் பதிலடி கொடுக்கப்படும் என்று ஈரானிய உயர்மட்ட தலைவர் அயதுல்லா அலி கமேனி எச்சரித்துள்ளார்.
மத்திய கிழக்கு நாடான ஈரானில் தொடர்ந்து இடம்பெற்று வரும் தீவிர போராட்டங்களுக்கு மத்தியில் அமெரிக்கா, ஈரானை எச்சரித்து வருகின்றது.
ஈரானிய அரசாங்கத்திற்கு எதிராக அந்நாட்டு போராட்டக்காரர்கள் இரவோடு இரவாக கடும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இலக்கு வைக்கப்படும் அமெரிக்கா
இந்நிலையில், குறித்த போராட்டங்களில் சுமார் 500 பேர் இறந்துள்ளதாகவும் ஈரானிய அரச ஊடகம் நிலைமையை சாதாரணமாக காட்சிப்படுத்திக் கொண்டிருப்பதாகவும் அமெரிக்கா தெரிவித்து வருகின்றது.

இதற்கிடையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரான் "மக்களை கொல்லத் தொடங்கினால்" அதன் மீது ஒரு பெரிய தாக்குதலை நடத்துவேன் என அச்சுறுத்தியுள்ளார்.
PRESIDENT TRUMP says he plans to speak with Elon Musk about sending Starlink to Iran as the nation faces a sweeping internet blackout amid anti-regime protests. pic.twitter.com/JzUOsIGAao
— Fox News (@FoxNews) January 12, 2026
இதனை தொடர்ந்து, அமெரிக்க தாக்குதல்கள் நடந்தால், இஸ்ரேல் மற்றும் ஈரானில் உள்ள அனைத்து அமெரிக்க இராணுவ மற்றும் கடற்படை தளங்களும் சட்டபூர்வமான இலக்குகளாக இருக்கும் என்று ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் எச்சரித்தார்.
இவ்வாறான பின்னணியில் ஈரானுடன் முக்கிய பேச்சுவார்த்தையை நடத்த திட்டமிட்டு வருவதாகவும் ட்ரம்ப் சர்வதேச ஊடகத்திடம் கூறியதாக தெரிவிக்கப்படுகின்றது.
பற்றியெரியும் ஈரான்... போர்க்களமான தெருக்கள்: இந்தியாவிற்கு ஏற்பட்டுள்ள வர்த்தகப் பாதிப்பு News Lankasri
சரிசமப சீசன் 5 போட்டியாளரும், தேவயானி மகளுமான இனியாவின் பிறந்தநாள் கொண்டாட்டம்... போட்டோஸ் இதோ Cineulagam